மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்..! விளைவு என்ன தொியுமா..?
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ முடியாவிட்டால் பதவி விலகுங்கள். என ஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளிடம் கூறியது மிக சரியான அணுகுமுறையாகும்.
என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் தாம் நிதியமைச்சராக இருந்த காலத்திலும் மத்திய வங்கியின் அதிகாரிகள்
பொருளாதாரத்தை சீர்குழைத்ததாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்இதனை தாம் பதவியில் இருந்து காலத்திலும் சுட்டிக்காட்டியதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் உண்மையை கோட்டாபய ராஜபக்ச கண்டறிந்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.பொருளாதாரத்தை கட்டியெழுப்பு முடியாவிட்டால் பதவிவிலகுமாறு
அதிகாரிகளை ஜனாதிபதி கோரியமை சரியானது என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்இதேவேளை அரசப் பணியாளர்கள் மீது குற்றம் சுமத்துவதன் மூலம் அரசியல்வாதிகள் தப்பிக்கொள்ளமுடியாது.
என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்பிரச்சனைகள் வரும்போதும் எப்போதும் அரச பணியாளர்களை வைத்து தப்பிக்கொள்ளும் நிலை உள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.