ஆபத்து நீங்காத நிலையில் மே-11ல் நாடு வழமைக்கு திரும்புகிறது..! மக்களும், அரசாங்கமும் எதற்கும் தயாராக இருக்கவேண்டும், மருத்துவர் சங்கம் எச்சரிக்கை..
இலங்கையில் கொரோனா அபாயம் முற்றாக நீங்காத நிலையில் மே-11ம் திகதி நாடு மீண்டும் வழ மைக்கு மாறுகிறது. இதனால் ஆபத்து உண்டானால் உடனடியாக ஆபத்தை எதிர்கொண்டிருக்கும் பகுதிகளை முடக்குவதற்கு அரசு தயாராக இருக்கவேண்டும்.
மேற்கண்டவாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், தற்போதுள்ள நிலையில் நாடு ஆரோக்கியமாக இருக்கின்றது. ஆனாலும் வழமைக்கு திரும்பும்போது அதனால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே நாடு வழமைக்கு திரும்பினாலும் மக்கள் அவதானமாக இருப்பது கட்டாயமானது. ஏதேனும் ஒரு இடத்தில் தொற்று ஆபத்து ஏற்படுமானால் உடனடியாக அந்த இடம் முடக்கப்படவேண்டும். 100வீதம் நாட்டில் ஆபத்து நீங்காமல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றது.
எனவே அனைவரும் அவதானத்துடனும் பொறுப்புடனும் இருக்கவேண்டும். என மருத்துவர் சங்கம் மேலும் எச்சரித்துள்ளது.