ஒரு மாதம் பயிற்சி அவசியம்!! -ரஹானே வலியுறுத்தல்-

ஆசிரியர் - Editor II
ஒரு மாதம் பயிற்சி அவசியம்!! -ரஹானே வலியுறுத்தல்-

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர நிலையால் வீட்டிலேயே முடங்கி உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு மீண்டும் களம் இறங்குவதற்கு முன்பாக ஒரு மாத கால பயிற்சி அவசியம் என்று இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே நேற்று ஆன்லைன் மூலம் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா தாக்கம் முடிந்து எத்தகைய கிரிக்கெட் (சர்வதேச அல்லது உள்ளூர்) போட்டிகளில் விளையாடுவது என்றாலும், அதற்கு முன்பாக வீரர்கள் முறையாக பயிற்சி எடுத்து தயாராவதற்கு குறைந்தது 3 அல்லது 4 வாரங்கள் அவசியமாகும். 

ஆனால் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மட்டுமே கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட வேண்டும். அணியின் டிரெய்னர் வழங்கும் ஆலோசனைப்படி வீட்டிலேயே தினமும் பயிற்சி மேற்கொள்கிறேன். 

தொடர்ந்து நல்ல உடல்தகுதியுடனும், நேர்மறை எண்ணத்துடனும் இருக்க வேண்டியது முக்கியமாகும் என்றார்.

Radio
×