சென்னையில் மதுபான சாலைகள் திறக்கப்படாது!! -தமிழக அரசு அறிவிப்பு-

ஆசிரியர் - Editor III
சென்னையில் மதுபான சாலைகள் திறக்கப்படாது!! -தமிழக அரசு அறிவிப்பு-

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுபான சாலைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 7 ஆம் திகதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் மதுபான சாலைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மே 7 ஆம் திகதி மதுபான சாலைகள் திறக்கப்படாது என்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.