கொரோனாவால் தற்கொலைக்கு முயன்ற சமி!! -அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor III
கொரோனாவால் தற்கொலைக்கு முயன்ற சமி!! -அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்-

ஊடரங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் போது தற்கொலை சொய்து கொள்ளலாம் என்று 3 முறை சிந்தித்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி தெரிவித்தார். 

அவருடைய மேற்படி கருத்து இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களை அதிர்ச்சியும் கவலையும் கொள்ள வைத்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மே 17 ஆம் திகதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ஊடரங்கால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் தனிமையில் உள்ளனர். பொழுதுபோக்கிற்காகவும், ரசிகர்களுக்காவும் பலர் இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டை மூலம் சக வீரர்களுடன் உரையாடுகின்றனர்.

இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, ரோகித் சர்மாவுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2015 உலகக் கோப்பையில் நான் காயமடைந்தபோது முழுமையாக குணமடைய எனக்கு 18 மாதங்கள் ஆகின. அது என் வாழ்க்கையில் மிகவும் வேதனையான மற்றும் நெருக்கடியான காலம் என்று சொல்லலாம். 

நான் மீண்டும் விளையாடத் தொடங்கியபோது சில தனிப்பட்ட சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது தற்கொலை செய்துகொள்ளலாம் என மூன்று முறை யோசித்தேன் என தெரிவித்தார். 

மார்ச் 2018-ல் ஷமியின் மனைவி, அவர் மீது குடும்ப வன்முறை, பிற பெண்களுடன் தொடர்பு, மேட்ச் பிக்சிங் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டது. இதனால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது.

மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டால் விசாரணை முடியும்வரை பிசிசிஐ, ஷமியின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. பின்னர் அனைத்தையும் சமாளித்து மீண்டும் மைதானத்திற்கு திரும்பினார்.

அந்தச் சமயத்தில் 24 மணி நேரமும் என்னுடன் குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் அப்போது என்னுடன் இல்லாமல் போயிருந்தால் நான் மோசமான முடிவை எடுத்திருப்பேன். இக்கட்டான சூழ்நிலையில் என்னுடன் முழுவதும் இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி கூறுகிறேன் எனவும் உருக்கமாக கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு