பெண்ணால் வேலையை இழந்த பொலிஸ் அதிகாரி..! தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக தண்டணை..
இடர்வலயமாக அறிவிக்கப்பட்ட நீர்கொழும்பிலிருந்து பெண் ஒருவரை அழைத்துச் சென்று நண்பர் வீட்டில் தங்கியிருந்த பொலிஸ் அதிகாரி தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய குற்றத்திற்காக பதவி நீக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை மாவட்ட சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரொஹான் சில்வா மற்றும் உதவி காவல்துறைமா அதிபர் ஜகத் பலிஹக்கார ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே குறித்த நடிவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் அமுலுக்கு வரும் வகையில் குறித்த காவல்துறை அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா இடர் அவதான வலயமாக பெயரிடப்பட்டுள்ள நீர்கொழும்பு பகுதியில் உள்ள பெண்ணொருவரை மாத்தறைக்கு அழைத்து வந்து, அவரோடு கேகனதுர-தலல்ல பகுதியில் உள்ள தமது நண்பரின் வீடொன்றில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது குறித்த காவல்துறை அதிகாரியும் அந்த பெண்ணும் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.