வாள்வெட்டு குழு உறுப்பினர்களின் தொலைபேசிகளில் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படங்கள்.

ஆசிரியர் - Editor I
வாள்வெட்டு குழு உறுப்பினர்களின் தொலைபேசிகளில் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படங்கள்.

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகித்து கைது செய் யப்பட்டவர்களின் கைதொலைபேசிகளில் தேசிய தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் பல வீடீயோக்கள் காணப்படுவதாக பொலிஸார் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதற்கு முயற்சிக்கிறார்கள் என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியிருக்கின்றார்.

சமகால நிலமைகள் கூறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் சமகாலத்தில் தொடர்ச்சிய hக நடைபெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன் றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில்அண்மைக்காலமாக வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் நேற்று யாழ்.மாவட்டத்தில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது கார்த்திகை மாதத்தில் வாள்வெட்டு ச ம்பவங்கள் அதிகரித்துள்ளமை மாவீரர் நாளை குழப்புவதற்கான சதியா என அமைச்சர் அனந்தி சசிதரன்

பொலிஸாரிடம் கேட்டிருந்தபோது வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் கைதொலைபேசிகளில் தலைவர் பிரபாகரனின் புகை ப்படங்கள் உள்ளிட்ட பல காணொளிகள் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்கள். 

இதன் ஊடாக பொ லிஸார் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதற்கு முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். இதேவேளை வாள்வெட்டு சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுங்கள் என மு தலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கேட்டுள்ளார். அதேபோல் நான் உட்பட பல மாகாணசபை உறுப்பினர் கள் இந்த விடயத்தில் கூடிய கரிசணை செலுத்தும்படி முதலமைச்சரை கேட்டிருக்கின்றார்கள். 

எனவே வாள்வெட்டு சம்பவங்கள் நிச்சயமாக கட்டுக்குள் கொண்டுவரப்படும் என கூறினார்.

தொடர்ந்து மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்தமை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக கேட்டபோது, தேசிய கொடியை மதிக்காமல் தேசிய கீதம் பாடப்படும் போது அமைச்சர் ஓடி திரிந்தார் என இனவாதமாக சில விடயங்கள் சொல்லப்படுகிறது. ஆனால் இது n தாடர்பாக வவுனியா மாவட்ட சிங்கள மாகாணசபை உறுப்பினர் ஜயத்திலக்கவுடன் தொடர்பு கொண்டு கேட்டிருந்தேன்.

அப்போதே தெரிந்தது இனவாதமாக கூறப்படும் அனைத்தும் பொய்யானவை என. அமைச்சர் அந்த பாடசாலை நிகழ்வில் தேசிய கீதம் பாடப்படும்போது அமைதியாக நின்றுள்ளார். அதேபோ ல்,அங்குள்ள விகாரைக்கு சென்று வழிபாடும் நடத்தியுள்ளார். பின்னர் தேசிய கொடியை ஏற்ற மற்றொரு வரை தேர்வு செய்து விட்டுள்ளார். எனவே அங்கு இனவாதமாக எதுவும் நடக்கவில்லை.

ஆனால் ஆளுநர் உள்ளிட்டவர்கள் இனவாதமாக இதனை நோக்க போகிறார்கள் என்றால் நாங்களும் சொல்Nவாம் தேசிய கொடியை நாங்கள் ஏற்று கொள்ளவில்லை என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு