உண்மையை மறைத்ததால், கிருமி தொற்று அதிகமான நிலையிலேயே IDH ல் அனுமதிக்கப்பட்டார்..! 2வது நபரின் மரணம் குறித்து மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்..
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இன்றைய தினம் மரணடைந்த நபர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே நோய் தீவிரமடைந்திருந்ததாக நீர்கொழும்பு வைத் தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறியிருப்பதுடன்,
குறித்த நபர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றிருப்பதுடன், கிருமி தொற்று அதிகமான நிலையி ல் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் அவர் தனக்கு சாதாரண காய்ச்சல் உள்ளதாக பொய்யை கூறியிருந்தார். ஆனாலும் அவர் கொரோனா தொற்றுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் தங்கியிருந்த விடுதியில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளடங்கலான பணிக் குழு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் மரணமடைந்த நபருடைய குடும்பத்திலுள்ள 17 பேர் தனிமைப்ப டுத்தப்பட்டிருக்கின்றனர். அதேபோல் குறித்த நபர் பள்ளிவாசல் ஒன்றில் மதிப்பார்ந்த இடத்தில் உள்ளதால்
இவரை சந்தித்து பலர் நலம் விசாரித்துள்ளனர். அவர்கள் தொடர்பாக அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். எனவே நோய் தீவிரமடைந்த நிலையிலேயே குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து
தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது கிருமி தொற்று அதிகமா னதுடன், நோய் நிலமையும் மேலும் மோசமானதால் தொற்று நோயியல் மருத்துவமனை மருத்துவர்களாலும் காப்பாற்ற முடியாமல்போனது. குறித்த நபர் தனக்கிருந்த நோய் அறிகுறிகள் குறித்து
உண்மையை வெளிப்படுத்தவில்லை. அதுவே அவரை காப்பாற்ற முடியாமல்போனதாக மருத்துவர் கூறியுள்ளார்.