இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் குசால் பெரோராக்கு இடமில்லை!!

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து குசால் பெரேரா விலக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 2-வது போட்டியில் விளையாடிய இலங்கை வீரர் குசால் பேரேராவுக்கு வலது கையின் நடுவிரலில் காயம் ஏற்பட்டது.
அவரது காயம் குணமடைய இரண்டு வாரங்கள் ஆகுமாம். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக காலேயில் வருகிற 19-ந்தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் இருந்து குசால் பெரேரா விலகியுள்ளார்.
மற்றொரு வீரரான வனிந்து ஹசரங்காவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய குறைந்தது நான்கு வாரங்கள் ஆகுமாம். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பில்லை.
இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயத்தால் அவரது அறிமுக டெஸ்ட் போட்டி தள்ளிப்போகியுள்ளது.