இலங்கை - மேற்கிந்திய தீவுகள் இறுதி T-20 போட்டி இன்று மாலை!!

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான 20-20 கிரிக்கெட் போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்றிரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கை அணி இன்றைய தினம் களமிறங்கவுள்ளது.