யாழ்.பல்கலைகழக வவுனியா வளாகத்திற்குள் மீட்கப்பட்டவை கஞ்சா செடிகளா..? மாணவா்களால் வளா்க்கப்பட்டதா..? தீவிர விசாரணை..
யாழ்.பல்கலைகழக வவுனியா வளாகத்திற்குள் கஞ்சா செடியை ஒத்ததான செடிகள் கண்டுபிடிக் கப்பட்ட நிலையில் அவை கஞ்சா செடியா எனவும், மாணவா்களால் நடப்பட்டு பாவிக்கப்பட்டதா? என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வளாகத்தில் கஞ்சா செடிகளை ஒத்த செடி வகை கைப்பற்றப்பட்ட நிலையில் அச் செடிகள் வளாகத்தின் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச் செடிகள் அங்கு வளர்க்கப்பட்டு மாணவர்களால் பயன்படுத்தப்பட்டதா
என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில் குறித்த செடி தொடர்பில் வவுனியா வளாகத்தினரால் ஆராயப்பட்டு வருகின்றது.இவ்விடயம் தொடர்பாக வவுனியா வளாகத்தினருடன் தொடர்புகொண்டு கேட்டபோது,
கஞ்சா செடியை போன்ற செடி வகை கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது கஞ்சாவா அல்லது வேறு தாவர வகையை சேர்ந்ததா என ஆராயப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.