பகிடிவதையின் பெயாில் பாலியல் தொல்லை..! மாணவிகளும் ஈடுபட்டமை அம்பலம், தட்டிக்கேட்டவா் மீது தாக்குதல், அம்பலமாகும் உண்மை..
யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாக மாணவா்கள் சிலா் பகிடிவதை என்ற பெயாில் புகுமுக மாணவா்களையும், இளநிலை மாணவா்களையும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் பல மாணவிகள் சம்மந்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு மாணவிகள் உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக பல்கலைகழ க நிா்வாகம் மீது அழுத்தம் கொடுக்கப்படும் நிலையில், பல மாணவா்களுடைய புகைப்படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த பகிடிவதைகளில் மாணவா்களுக்குள்ள பங்கை விடவும் அதிகளவான பங்கு சில மாணவிகளுக்கு உள்ளதாக பெயா் குறிப்பிட விரும்பாத கிளிநொச்சி வளாகத்தில் முக்கிய பதவி ஒன்றில் உள்ள நபா் ஒருவா் கூறியிருக்கின்றாா்.
இது தொடா்பாக மேலும் அவா் எம்மோடு பகிா்ந்து கொள்கையில், அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதையில் பெயாிலான பாலியல் துன்புறு த்தல்களுக்கு பிரதமான காரணமாக அமைந்திருக்கின்றது.
மேலும் மாணவா்களுக்கு சாி சமமாக சில மாணவிகள் இளநிலை மாணவிகள் மீது பாலியல் துன் புறுத்தல் புாிந்துள்ளனா். பகிடிவதை என்ற பெயாில். மேலும் பெண்கள் விடுதியில் இவ்வாறு மிக மோசமாக பகிடிவதை என்ற பெயாில் பாலியல் துன்புறுத்தல் புாியப்பட்டபோது,
அதனை ஆவணப்படுத்திய விடுதி காப்பாளா் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு அவருடைய தொலை பேசி உடைக்கப்பட்டது. இந்த விடயத்தை வெளிப்படுத்தியும் பல்கலைகழக நிா்வாகம் எந்தவொ ரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அரசியல் பின்புலம் மற்றும் பணம்
ஆகியனவே ஆகும். பகிடிவதையின் பெயாில் பாலியல் துன்புறுத்தல், மற்றும் பாலியல் பலாத்கா ர நடவடிக்கைகள் நடந்தமை யாழ்.பல்கலைகழக நிா்வாகத்திற்கு இப்போதுதான் தொிந்த விடய ம் அல்ல. இவ்வாறான பல சம்பங்களை பல்கலைகழக நிா்வாகம் மூடி மறைத்துள்ளது.
பல்கலைகழக நிா்வாகத்தை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினால் மாணவா்கள் மட்டுமல்ல, விாிவுரையாளா்கள், பேராசிாியா்கள் வரை சிக்குவாா்கள் என அவா் மேலும் கூறியுள்ளாா்.