காங்கேசன்துறை கடலில் 155 கிலோ கஞ்சா சிக்கியது!

ஆசிரியர் - Admin
காங்கேசன்துறை கடலில் 155 கிலோ கஞ்சா சிக்கியது!

காங்கேசன்துறையை அண்மித்த கடற்பரப்பில், 155 கிலோ நிறையுடைய கஞ்சா போதைப்பொருளை, இன்று அதிகாலை 1 மணியளவில், கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த கடற்பரப்பில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றில் நீர் உட்புகாத வண்ணம், நீல நிற பொலித்தீன் உரையினால் சூட்சுமமான முறையில் பொதி செய்யப்பட்டிருந்ததாகவும், அவ்வாறு பொதி செய்யப்பட்ட 28 பொதிகள் கைப்பற்றப்பட்டதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

வடக்கு கடல் மார்க்கம் ஊடாகக் கடத்தப்படவிருந்த மேற்படி போதைப்பொருட்கள், கடற்படையினரின் ரோந்துப் பணியை அவதானித்த நிலையில், கடத்தல்காரர்கள் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி, 23.25 மில்லியன் ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில், இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள், காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு