வடக்கு,கிழக்கில் உதயமாகும் 1000 விகாரைகள்

ஆசிரியர் - Editor2
வடக்கு,கிழக்கில் உதயமாகும் 1000 விகாரைகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கலைமகள் மைதானத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை பொதுக்கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வழங்கப்பட்ட கிராமத்தை சீரமைக்கும் அரசாங்கம் என்னும் பெயரிலான தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இன நல்லிணக்க நடவடிக்கை என்னும் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Radio
×