வடமாகாண கல்வி அமைச்சர் மீது நடவடிக்கை.

ஆசிரியர் - Editor I
வடமாகாண கல்வி அமைச்சர் மீது நடவடிக்கை.

இலங்கையின் யாப்பு விதிகளுக்கு அமைவாக கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இன்றயதினம் செல்லவுள்ளதாக வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் மாநாடு நிறைவடைந்ததன் பின்னர் அங்கு சென்று விசேட சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது ஆளுநர் என்ற வகையில் என்னால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பத்திரமுல்லையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில்

எனது தனிப்பட்ட கருத்துக்களை இங்கே கூற விரும்பவில்லை, ஏனெனில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளை நான் யோசிக்க கடமைப்பட்டுள்ளேன். நான் எந்த முடிவினை எடுத்தாலும் அதற்கான பின் விளைவுகள் நிச்சயமாக இருக்கும். அப்படிப்பட்ட விளைவுகளை நான் யோசிக்க வேண்டியிருக்கின்றது. எனத் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு