வெறும் 5 லட்சம் இந்திய ரூபாயில்..! டாடா சுமோவை பென்ஸ் ஜீப்பாக மாற்றிய இளைஞன். நம்ப முடிகிறதா?

ஆசிரியர் - Editor I
வெறும் 5 லட்சம் இந்திய ரூபாயில்..! டாடா சுமோவை பென்ஸ் ஜீப்பாக மாற்றிய இளைஞன். நம்ப முடிகிறதா?

இந்தியாவில் புகழ்பெற்ற டாடா நிறுவனத்தின் சுமோ வாகனத்தை பென்ஸ் நிறுவனத்தின் ஜி 350 டி வாகனம்போன்று அச்சு அசலாக மாற்றம் செய்து இந்திய இளைஞன் ஒருவன் பலருடைக கவனத்தை ஈர்த்துள்ளான். 

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் இந்த சிறப்பு வாய்ந்த டாடா சுமோ காரை, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி கிளாஸ் காராக மாற்றி வடிவமைத்துள்ளார். இந்த சுமோ, 2002ம் ஆண்டிற்கான மொடல் என கூறப்படுகின்றது. 

இதனை புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் காருக்கு இணையாக உருமாற்ற அவர் ரூ. 5 லட்சம் வரை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுமோவிற்கு இந்த புதிய அவதாரத்தை கொடுக்க சுமார் 6 மாதங்கள் வரை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. 

அந்தவகையில், சுமோவினை பென்ஸ் ஜி கிளாஸ் காராக தோன்றும் வகையில், புதிய வட்ட வடிவ முகப்பு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கஸ்டமைஸ் செய்யப்பட்ட பம்பரும் முன்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், காரின் முகப்பு பகுதியில் உள்ள கிரில் அமைப்பு ஜி கிளாஸ் கார்களில் இருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது. இவ்வாறு, அனைத்து பாகங்களும் சுமோவின் உருவத்தை மாற்றி, முற்றிலுமாக பென்ஸ் ஜி கிளாஸைப் போன்று காட்சியளிக்கும் வகையில் 

கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மேற்கூறியவை மட்டுமின்றி புதிய அவதாரம் பெற்றுள்ள சுமோவில் கூடுதலாக பல்வேறு சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.  சுமோவின் மேற்கூறையில் எல்.ஈ.டி மின் விளக்கு காணப்படுகின்றது. இத்துடன், 

OFF-ROAD பயணத்திற்கேற்ப கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, காரின் பின்பக்க டிசைனும் ஜி-வேகன் காரைப் போன்று காட்சியளிக்கின்றது. அதற்கேற்ப, சிறிய ஜன்னல், குட்டியான மின் விளக்கு ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. 

இத்துடன், கூடுதலாக பவர் ஸ்டியரிங், ஏசி மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சொகுசு மற்றும் பிரிமியம் வசதிகளுக்காக லெதர் போர்வையாலான இருக்கை உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு