ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஆட்டோவை உல்லாச விடுதியாக மாற்றிய தமிழ் இளைஞன்..! சாதனையை வியக்கும் பல லட்சம் மக்கள்..(படங்கள்)

ஆசிரியர் - Editor I
ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஆட்டோவை உல்லாச விடுதியாக மாற்றிய தமிழ் இளைஞன்..! சாதனையை வியக்கும் பல லட்சம் மக்கள்..(படங்கள்)

இந்தியா- தமிழகம் நாமக்கல் மாவட்டம் வேலுாரை சோ்ந்த 23 வயதான தமிழ் இளைஞன் நாம் சாதாரணமாக பயன் படுத்தும் ஆட்டோவுக்குள் படுக்கை அறை, சமையல் அறை, ஓய்வு எடுக்கும் இடம் என சகல வசதிகளும் கொண்ட ஒரு சொகுசு வீடாக மாற்றியமைத்து பல லட்சம் மக்களுடைய கவனத்தை ஈா்த்துள்ளான். 

பி.ஆா்.அருண் பிரபு என்ற குறித்த இளைஞன் பெங்களுா் பகுதியில் இயங்கும் ஆா்க்கிடெக்ஸா் பில்போா்டில் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றாா்.  இவர்தான் பஜாஜ் நிறுவனத்தின் ஆர் மாடல் ஆட்டோவை பயன்படுத்தி சொகுசு வீடு ஒன்றை உருவாக்கியுள்ளார். 

பொதுவாக இதுபோன்று வாகனங்களை வீடாக மாற்றியைக்கும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் கலாச்சாரமாகும். அந்தவகையில் உலகம் முழுவதும் பரவியதுதான் மோட்டார் ஹோம்ஸ், கேம்பர் வேன், கேரவன்கள் மற்றும் ஆர்வி-க்கள். இதில், மோட்டார் ஹோம்ஸ் என்பது வீடு இல்லாத நபர்கள் 

தங்களின் வாகனத்தையே வீடாக பயன்படுத்துவதாகும். கம்பா் வான்களில் முகாமிட்டு தங்குபவர்கள் மத்தியில் புகழ்வாய்ந்ததாக காணப்படுகின்றது. இதில், அவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் உருவாக்கப்பட்டிருக்கும். கேரவன் என்பது அனைத்து சொகுசு வசதிகளையும் அடங்கிய ஓர் வாகனம் ஆகும். 

இது, திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய வாகனத்தின் அடிப்படையில்தான் நாமக்கல்லைச் சேர்ந்த அருண் பிரபு பஜாஜ் ஆட்டோவை மாற்றியமைத்துள்ளார். இவையனைத்தையும் வெறும் ஐந்து மாதங்கள் 

இடைவெளியில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றி புதிய சாதனைப் படைத்துள்ளார். அருண் பிரபு பிற இளைஞர்களைப் போலவே வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெகு நாட்களாக நினைத்து வந்தார். ஆனால், அந்த எண்ணத்தை வெறும் நினைவுகளாகவே மனதில் பூட்டி வைக்காமல், 

அதனை நிஜ வாழ்க்கையிலும் நிறைவேற்றியுள்ளார். இதற்காக பயன்படுத்தப்பட்டதுதான் இந்த மூன்று சக்கர வாகன சொகுசு வீடு. இதுவரை, நான்கு சக்கர பெரிய ரக வாகனங்களில் மட்டுமே இத்தகைய உருமாற்றம் செய்யப்பட்டு வந்தநிலையில், புதிய முயற்சியாக மூன்று சக்கர வாகனத்தில் அவர் சாதித்துள்ளாா். 

இதுபோன்று, மூன்று சக்கர வாகனத்தில் இத்தகைய மாற்றத்தை செய்வது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. மூன்று சக்கர வாகனங்களின் நிலைத் தன்மை நான்கு சக்கர வாகனங்களைப் போன்று இருக்காது. ஆகையால், ஒவ்வொரு மாற்றத்தின்போதும் ஆட்டோ சாய்ந்துவிடாத வண்ணம் இருக்க அ

வர் பல கடினமான சூழலைச் சந்தித்துள்ளார். அவ்வாறு அதன் எடை அனைத்து பக்கத்திற்கும் சமமாக பரவும் வகையில் கூடுதல் பாகங்களைப் பொருத்தியுள்ளார். ஆட்டோவின் சரக்குகளை ஏற்றிச்செல்லும் பின் பகுதியை நீக்கிய அருண் பிரபு, அவற்றிற்கு பதிலாக உல்லாச விடுதியில் காணப்படுகின்ற 

பல்வேறு வசதிகளைக் கொண்ட அடுக்குகளை கட்டமைத்துள்ளார். அந்தவகையில், ஒரு நபர் ஓய்வெடுத்து தங்குவதற்கான சகல வசதிகளையும் இதில் புகுத்தியுள்ளார் அருண். முக்கியமாக மேல் தள படுக்கையறை (ஒன்று), குளியலறை, சமையலறை (அனைத்து பாத்திரங்களையும் வைத்துக்கொள்ளலாம்), 

பணியிடம், வாட்டர் ஹீட்டர் மற்றும் ஒரு கழிப்பறை கூட உள்ளது. இந்த கழிப்பறையானது படுக்கையறைக்கு கீழாகவே உள்ளது. அதாவது லிவிங் ரூம் என கூறப்படும் அதே பகுதியில் அது நிறுவப்பட்டுள்ளது. இத்துடன், வாகனத்தின் மேற்புறத்தில் 250 லிட்டர் நீர் தொட்டியும், 

600W சோலார் பேனலும் பொருத்தப்பட்டுள்ளது. இது கேபினுக்குள் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்யவும், வாகனத்திற்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் தயாரித்துக்கொள்ளவும் உதவும். இத்துடன், சன்பாத் எனப்படும் சூரிய குளியல் செய்வதற்கு ஏதுவாக குடையுடன் கூடிய இருக்கை நிறுவப்பட்டுள்ளது. 

இது இயற்கையை ரசிக்கவும், காற்றோட்டமாக ஒய்வெடுக்கவும் பயன்படும். தொடர்ந்து, அலமாரிகள் மற்றும் துவைத்த துணிகளை உலர வைக்கின்ற வகையில் வெளிப்புறத்தில் நீட்டிக்கக்கூடிய துணி ஹேங்கர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஆட்டோவில் (சொகுசு விடுதியில்) காணப்படுகின்றது. 

மேலும், மேற்கூரைக்கு செல்வதற்கு ஏதுவாக ஏணிகள் மற்றும் கதவுகள் உள்ளிட்டவை நிறுவப்பட்டுள்ளன. தொடர்ந்து, கேபினுக்குள் சமைப்பதற்காக ஏதுவாக இயற்கை எரிவாயு அடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இது விரும்பிய உணவை சமைத்து உண்ண உதவும். ஒட்டுமொத்தத்தில் 

இந்த பஜாஜ் ஆட்டோவில் சில சொகுசு விடுதிகளில்கூட காணப்படாத வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூர பயணத்திற்கு செல்லும் வணிகர்கள் மற்றும் ஆராய்ச்சி பணிக்காக அடர் வனத்திற்கு செல்பவர்களுக்கு இந்த வாகனம் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என அருண் பிரபு தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு