காலி, இரத்தினபுாி மாவட்டங்களில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்..! இனமுறுகல் உண்டாகும் வாய்ப்பு..
காலி- தலாப்பிட்டிய, மற்றும் இரத்தினபுாி- கெட்டனிகேவத்த பகுதிகளில் இரு பள்ளி வாசல்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கும் நிலையில், தொடா்ச்சியாக அந்தப் ப குதிகளில் பதற்றமான நிலை நீடிப்பதாக கூறப்படுகின்றது.
நேற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறித்த இரு பள்ளிவாசல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குறித்த பள்ளிவாசல் களின் யன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு வேளையில், காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாபிட்டிய பள்ளி வாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு காலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள் ளிட்டோர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.நேற்று மாலைவரை சம் பவம் தொடர்பிலான சந்தேக நபர் அல்லது நபர்கள் அடையாளம்
காணப்பட்டிருக்க வில்லை. எவ்வாறாயினும் இந்த தாக்குதலில் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ள நிலையில், அது குறித்த விஷேட சட்ட நடவ டிக்கை அவசியமில்லை என பள்ளிவாசல் தரப்பில் பொலிஸாருக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்துள்ளன.இதனிடையே நேற்று இரத்தினபுரி மாவட்டம், நிவித்திகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெட்டனிகேவத்த பகுதியில் பள்ளிவாசல் மீது
கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியொன்றில் வந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இதன்போது பள்ளிவாசலின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து நிவித்திகல பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் நேற்று சம்பவத்துடன் தொடர்புடைய இருவரைக் கைது செய்துள்ளனர். பிரதேசத்தின் சி.சி.ரி.வி. காணொளிகளை மையப்படுத்தி
முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் முச்சக்கர வண்டியில் அவ்விருவரும் வந்து தாக்குதல் நடாத்துவது வெளிப்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
நிவித்திகல, கலவான வீதியிலுள்ள குறித்த கெட்டனிகேவத்த பள்ளிவாசல் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவரில் ஒருவர் நிவித்திகல பகுதியில் மோட்டார் வாகன திருத்துநர் எனவும் சந்தேக நபர்கள்
தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.