கரும்பு தோட்ட காணி பிணக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் சீ.வி

ஆசிரியர் - Editor I
கரும்பு தோட்ட காணி பிணக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் சீ.வி

கிளிநொச்சி- கரும்புதோட்ட காணி விவசாய மற்றும் கால்நடை பண்ணைக்கு வழங்கப்ப ட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு தேவையான காணிபோக மிகுதி காணியை மக்களுக் கு பகிர்ந்தளிப்பது தொடர்பாக மீளாய்வு செய்யப்படும். என வடமாகாண முதலமைச்சர் சீ. வி.விக்னேஷ்வரன் கூறியிருக்கின்றார்.

கரும்புதோட்ட காணி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விவசாய மற்றும் கால்நடை பண்i ண அமைப்பதற்காக குத்தகைக்கு வழங்கப்பட்டது. இதேவேளை அந்த காணியை தமக் கு விவசாயத்திற்கு வழங்குமாறு கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் கிராம மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்துவந்தனர். 

இதற்குள் மேற்படி கரும்புதோட்ட காணி குத்தகைக்கு பெற்றவர்கள் தவறானவர்கள் எனவும். அவர்கள் அந்த காணியை தவறாக பயன்படுத்துகிறார்கள் எனவும் கூறப்பட்டது. இதனை யடுத்து இந்த குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்து அறிக்கை தரும்படி முதலமைச்சரிடம் வ டமாகாணசபையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

மேற்படி அறிக்கை நேற்று சபையில் எடுக்கப்பட்டபோதே முதலமைச்சர் மேற் கண்டவாறு கூறியிருக்கின்றார். மேற்படி அறிக்கை சபைக்கு எடுக்கப்பட்டபோது மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை எழுந்து, வடமாகாணசபை 180 குடும்பங்களுக்கு தலா 1 ஏக்கர் வீதம் காணிகளை வழங்கினால் ஏழை எளிய மக்கள் அதனால் நன்மையடைவார்கள் என கூறியதுடன், 

20 ஏக்கரை ப ண்ணை அமைப்பதற்கு வழங்கிவிட்டு மிகுதி 180 ஏக்கர் காணியை 1 ஏக்கர் வீதம் மக்களுக் கு வழங்கவேண்டும் என கூறியதுடன், கிளி.வட்டக்கச்சியில் உள்ள பண்ணையை படையி னரிடமிருந்து காப்பாற்ற வக்கற்றவர்கள் மக்களுக்கு கிடைக்கவேண்டிய காணியை தடுப்பது முறையற்றது என்றார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் நான் கரும்புதோட்டத்திற்கு சென்று பார் த்தேன். அங்கே பண்ணை அமைக்கவுள்ள தனியார் நிறுவனம் அங்கு தாங்கள் செய்வோ ம் என கூறிய அனைத்தையும் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஆனால் தமக்கு அரசியல் அழுத்தங்கள் மற்றும் குத்தகை ஆவணம் வழங்கப்படாமை போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாக கூறியிருக்கின்ற hர்கள் என கூறினார். 

இதனை தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கருத்து கூறுகையில் பண்ணைக்கு தேவையான காணிகள் தவிர்ந்து மிகுதி காணிகளை மக்களுக்கு வழங்கலாம் அது நியாயமாக இரு க்கும் என்றார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பண்ணைக்கு தேவையான காணி தவிர் ந்த மற்றய காணிகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பாக மீளாய்வு செய்யப்படும் என கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு