வைக்கோல் பட்டடை நாய்போல் உங்கள் கருத்துக்கள் உள்ளது. சீ.வியை கடிந்தார் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா.

ஆசிரியர் - Editor I
வைக்கோல் பட்டடை நாய்போல் உங்கள் கருத்துக்கள் உள்ளது. சீ.வியை கடிந்தார் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா.

வடமாகாணம் நன்மையடையும் வகையிலான திட்டமாக இருந்தாலும் எங்களுடன் கல ந்து பேசாமல் செய்யப்படும் திட்டங்களை நாங்கள் அங்கீகரிக்க இயலாது. என முதலi மச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியிருக்கும் நிலையில், வைக்கோல் பட்டடை நாய்போ ல் உங்கள் கருத்துக்கள் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறியிருக்கின்றார்.

மீள்குடியேற்ற அமைச்சினால் வடமாகாணத்தில் பாடசாலைகள் சில புனரமைப்பு செய்யப் படுவது தொடர்பாக வடமாகாணசபைக்கு தெரியப்படுத்தப்படவில்லை என கூறி முதலமை மச்சர் அரசாங்க அதிபர் ஒருவருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக நேற்று நடைபெற்ற வட மாகாணசபையின் 115வது அமர்வில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா விசேட கவனயீர்ப்பொன்றை சமர்பித்திருந்தார். 

மேற்படி விசேட கவனயீர்ப்பு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில், மீள்குடியேற்ற அமைச்சினால் பாடசாலைகள் சில புனரமைப்புச் செய்யப்படுவது தொடர்பாக தெரியப்படுத்தப்படவில்லை. எனக்கூறி முதலமைச்சர் சீ.வி.வி க்னேஷ்வரன் அரசாங்க அதிபர் ஒருவருக்கு எழுதிய கடிதம் சகித்துக் கொள்ள கூடியதாக இல்லை. 

மேலும் அந்த கடிதத்தில் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பாக தெ ரியப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட ஒ ருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தீர்மானங்களுக்கு சட்டவலு இல்லை. என கூறியிருந் தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு சட்டவலு இல்லை என்றால் அங்கே பேசி பயனில்லையே. 

மேலும் அங்கே நாங்கள் பேசும் விடயங்கள் சாத்தியப்படாது என உணர்ந்தால் அரசாங்க அதிபர் அதனை உடனேயே மறுக்கவேண்டும். இல்லையேல் பின்னர் மறுத்திருக்கலாம். ஆனால் எல்லா வற்றுக்கும் ஆமாம் போட்டுவிட்டு பின்னர் அதற்கு எதிர்மாறாக செயற்படுவது பிழையானது. 

எமக்கு தெரியாமல் செய்யாமல் சொல்லிவிட்டு செய்யுங்கள் என்றே கேட்கிறோம். எங் கள் மாகாணத்திற்கு நன்மை பயப்பதாக இருந்தாலும் எங்களுக்கு கூறிவிட்டு எங்களு டன் இணைந்து செயற்படுவதால் என்ன பாதகம்? என முதலமைச்சர் கேட்டார். இதற்குப் பதிலளித்த எதிர்கட்சி தலைவர் சி.தவராசா வைக்கோல் பட்டடை நாய்போல் உங்கள் கருத்துக்கள் உள்ளது என கூறியதுடன்,

மீள்குடியேற்ற அமைச்சு பாடசாலைகளை புனர மைத்துவிட்டு கொண்டு செல்லமாட்டார்கள். அந்த பாடசாலைக்ள தொடர்ந்தும் மாகாண கல்வி அமைச்சுக்கு கீழேயே இருக்கும். நீங்களும் செய்யமாட்டீர்கள். செய்பவர்களையும் விடமாட்டீர்கள் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு