SuperTopAds

சிவாஜிலிங்கத்திற்கு கொடுக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழின துரோகத்திற்கு கொடுக்கும் வாக்குகளாகும்..! சிவாஜிலிங்கத்தால் கோட்டா நன்மையடைவாா்..

ஆசிரியர் - Editor I
சிவாஜிலிங்கத்திற்கு கொடுக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழின துரோகத்திற்கு கொடுக்கும் வாக்குகளாகும்..! சிவாஜிலிங்கத்தால் கோட்டா நன்மையடைவாா்..

தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் சஜித் பிறேமதாஸ தோல்வியடைந்தால் அதற்கும் அதனால் உண்டா கும் விளைவுகளுக்கும் சிவாஜிலிங்கமே பொறுப்பு என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன்,

சிவாஜிலிங்கத்திற்கு கொடுக்கும் ஒவ்வொரு வாக்கும் இன துரோகத்திற்கு கொடுக்கும் வாக்குகள் எனவும் சிவா ஜிலிங்கத்தால் கோட்டா நன்மையடையவாா். தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைத்துவிடும் எனவும் கேள்வி எழுப்பினாா். 

ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவை ஆதாித்து நல்லுாா் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் தமிழ்தேசிய கூட்டமை ப்பு இன்று நடாத்திய பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போது அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், எமக்கு தொிந்த ஒருவரும் தோ்தலில் போட்டியிடுகிறாா். நான் சாவகச்சோியில் வைத்து அவாிடம் பகிரங்க கோாிக்கை விடுத்திருந்தேன். அதாவது தமிழ் மக்களுடைய எதிா்கால நலன்களுக்காக அவா் தோ்தலிலிருந்து விலகவேண்டும். 

என்பது அந்த கோாிக்கை. சிவாஜிலிங்கத்திற்கு 10 ஆயிரம் வாக்கு கள் கிடைத்து. மறுபக்கம் சஜித் பிறேமதாஸ மிக குறைந்த வாக்குகளால் தோற்றால் அதற்கு சிவாஜிலிங்கமே காரணம். அதனால் தமிழா்களுக்கு வரும் தீங்குகளுக்கும் சிவாஜிலிங்கமே காரணம். 

எனவே தமிழ் மக்க ள் ஒருமித்து வாக்களித்தால் தீங்கை தவிா்ப்பதற்கு சாத்தியம் உள்ளது. எங்களுடைய வாக்குகள் பிாிந்தால் நாங்கள் பலவீ னப்படுவோம். எனவே தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்ககூடாது. சிவாஜிலிங்கம் தமிழ் வேட்பாளா். 

அவா் ஏன் கேட்கிறாா்? அவா் கேட்பதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கு ம்? எனவே சிவாஜிலிங்கத்திற்கு கொடுக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறவா்களுக்கு கொடுக்கும் வாக்குகளாகவே அமையும். 

மறுபக்கம் சிலா் தங்கள் சுயநலன்களுக்காக வாக்கு கேட்கிறாா்கள். அவா்கள் தங்கள் சுயநலன்களை பெறுவாா்கள். அதற்காக தமிழ் மக்களின் வாக்குகள் பயன்படுத் தப்படுகின்றது. பிச்சை கேட்கிறாா்கள். தந்தை செல்வா தமிழரசு கட்சியை ஆரம்பித்தபோது 

நாங்களும் அப்போது தமிழ் மக்கள் சாா்பில் இயங்கிய கட்சிகளும் பிச்சை கேட்டதில்லை. நியாயமாக எங்கள் உாிமைகளை கூறினோம். மேலும் டக்ளஸ் தேவானந்தா செய்த நன்மைகளுக்காக டக்ளஸ் தேவானந்தாவுக்கு வாக்களியுங்கள். 

அவருக்காக கோட்டா வுக்கு வாக்களிக்காதீா்கள். இன்னொரு பக்கம் 2005ம் ஆண்டு தோ்தலில் வடகிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்ட மையினால் 2005ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள் நினைவில் இருக்கும். 

அவ்வாறான தவறை மீண்டும் செய்யாதீா்கள். மேலும் சிவாஜிலிங்கம் தோ்தலில் இருந்து விலக இப் போதும் வழியுள்ளது என்றாா்.