ஊரெழு கோர விபத்தில் உயிரிழந்தோரின் வாழ்வின் சில பக்கங்கள்

ஆசிரியர் - Admin
ஊரெழு கோர விபத்தில் உயிரிழந்தோரின் வாழ்வின் சில பக்கங்கள்

யாழ். ஊரெழு பலாலி பிரதான வீதியில் நேற்று  முன்தினம் செவ்வாய்க்கிழமை(23) பிற்பகல் மோட்டார்ச் சைக்கிளும், சிறியரக ஹன்ரர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கோர விபத்தில் 25 வயதான இளைஞரொருவர் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். இந்நிலையில் மோட்டார்ச் சைக்கிளின் பின்னாலிருந்து பயணித்த இளைஞரும் சிகிச்சை பலனினின்றி உயிரிழந்தமை நீங்கள் யாவரும் அறிந்ததே. 

உயிரிழந்த மேற்படி இரு இளைஞர்கள் தொடர்பாகவும் எமது செய்திச் சேவைக்குச் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.  

இந்தக் கோர விபத்தில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குப்பிளான் தெற்கைச் சேர்ந்த நாகேந்திரன் நிசாந்தன்(வயது- 26) இவரது தாயாருக்கு கிடைத்த ஒரேயொரு அரும் புத்திரனாவார். இவர் சொந்தமாக உழவு இயந்திரம் வைத்துள்ளதுடன் அதன் சாரதியாகவும் பணிபுரிந்து வருகிறார். அத்துடன் இவர் திருமணமாகாதவராகவும் காணப்படுகிறார்.   

மோட்டார்ச் சைக்கிளின் பின்னாலிருந்து பயணித்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்தவர் குப்பிளான் தெற்குப் பகுதியைச் சேர்ந்த அரியகுட்டி தனேஸ்வரன்(வயது- 36) ஆவார். இவருக்குத் திருமணமாகியுள்ள நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையாராகக் காணப்படுகிறார்.  

இவரது மூத்த பிள்ளை 11 வயதான பெண்பிள்ளையாவார். இரண்டாவது  ஆறே வயதேயான ஆண்பிள்ளையாவார்.கடைசிப் பிள்ளை பிறந்து மூன்று மாதங்களேயான பெண்குழந்தையாவார். 

அரியகுட்டி தனேஸ்வரன் அன்றாடம் கூலி வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவரது திடீர் இழப்பு குடும்பத்தை வெகுவாகப் பாதித்துள்ளது.   

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு