கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணி செய்த மக்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்..!
அம்பாறை- கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை ஒட்டி இன்று காலை மக்கள் சிரதமதான பணிகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது அங்குவந்த இராணுவத்தினர் மக்களை அச்சுறுத்தியதுடன், சிரமதானத்தை நிறுத்துமாறு கூறினர்.
எனினும் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் மக்கள் சிரதமதான பணிகளை தொடர்ந் தும் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் பணிகளை நிறுத்தாவிட்டால் கைது செய்யப் படுவீர்கள் என இராணுவம் அச்சுறுத்தி சென்றதாக மக்கள் கூறுகின்றனர்.
கார்த்திகை 27 மாவீரர் தின நிகழ்வுகளை முன்னேற்பாடுகள் முன்னிட்டு சிரமதானப் பணிகள் தமிழர் தாயகப் பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்ல மீள் நிர்மாணிப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை கஞ்சிகுடிச்சாறு,
மட்டக்களப்பு , மாவடி முன்மாரி, தாண்டியடி ,வாகரை கண்டலடி திருமலை ஆலங்குளம்,செம்மலை உள்ளிட்ட 7 மாவீரர் துயிலும் இல்லங்களும் சிரமதானப் பணிகளை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தனர். அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல
மீள் நிர்மாணிப்பு குழுவின் தலைவரான குட்டிமணி மாஸ்டர் என்று அழைக்கபடும் நாகமணி கிருஷ்ணபிள்ளை தெரிவித்ததாவது. கார்த்திகை 27 தாயக விடுதலைக்கான ஆகுதியான மாவீர செல்வங்களை நினைவுகூரும் முகமாக முன்னேற்பாடுகள்
இந்த வருடமும் முன்னெடுக்கப்படுகிறது.மாவீரர் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க இருப்பதனால் இன்று சிரமதான பணிகளை முன்கொண்டு செல்கிறோம். ஆனால் இராணுவ தரப்பு இங்கு வந்து சிரமதான பணிகளை இடை நிறுத்த கோரினர். இல்லையேல் கைது செய்து
கொண்டு செல்ல நேரிடும் என அச்சுறுத்தி சென்றனர். அதன் பின்னர் இரண்டாவது தடவையாக அதே இராணுவத்தினர் இங்கு வந்தனர். சிரமதான பணியினை மேற்கொள்ளும் அனைவரையும் ஒளிப்படம் எடுக்க வேண்டும் அத்தோடு தங்களது சுய விபரத்தையும் வழங்குமாறு கோரினர்.
இதனை மறுத்த பின்னர் இவற்றை பதிவு செய்த ஊடகவியலாளரின் அடையாள அட்டையை பரிசோதனை செய்த பின்னர் அட்டையை ஒளிப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து அகன்று சென்றனர் – என்றார்.