ரெலோவும் பச்சைக்கொடி - சஜித்துக்கு கூட்டமைப்பு ஆதரவு!

ஆசிரியர் - Admin
ரெலோவும் பச்சைக்கொடி - சஜித்துக்கு கூட்டமைப்பு ஆதரவு!

வவுனியாவில் நேற்றுக் கூடிய ரெலோவின் தலைமைக் குழு, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளது.

வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் கட்சியின் உப தலைவர் பிரசன்னா தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் பலத்த கருத்து நிலைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் பெரும்பான்மையாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அவருக்கு ஆதரவளிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியன முடிவு செய்திருந்தன.

இந்நிலையில் ஒட்டுமொத்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதென்ற முடிவுக்கு வந்துள்ளது.

Radio
×