ஈஸ்டா் தாக்குதலின் பின்னணியில் ஒரு ஜனாதிபதி வேட்பாளா்..! தெற்கு ஊடகம் அதிா்ச்சி தகவல்..
ஈஸ்ட்டா் தாக்குதலின் பின்னணியில் ஜனாதிபதி வேட்பாளா் ஒருவரே உள்ளதாக தெற் கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
அடுத்து வரும் நாட்களில் இது தொடர்பில் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு தயாராகி வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனொரு நடவடிக்கையாக நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய பிரதேசத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்,
அதற்காக ஒரு குழு செயற்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆலய பிரார்த்தனையின் பின்னர்
கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவு்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.