யாழில் அப்படியொரு விடயம் இருப்பது அமைச்சர் அனந்திக்கு தெரியுமா? விக்னேஸ் குற்றச்சாட்டு

ஆசிரியர் - Editor II
யாழில் அப்படியொரு விடயம் இருப்பது அமைச்சர் அனந்திக்கு தெரியுமா? விக்னேஸ் குற்றச்சாட்டு

அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு வர்த்தக துறையை முன்னேற்றும் நோக்கம் இல்லை என யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் வி.கே.விக்னேஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக சந்தை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை கிறின்கிறாஸ் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்த கண்காட்சி வருடாந்தம் நடத்தப்படுகிறது. இதில் வடக்கு மாகாண சபைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடமாகாண முதலமைச்சரை இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நாங்கள் அழைத்துள்ளோம். ஏனைய வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வடமாகாண சபை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் ஏற்றக் கொள்ள முடியாது. வட மாகாண சபைக்கான வர்த்தக அமைச்சர் பதவி ஏற்று எத்தனை மாதங்கள் கடந்து விட்டன.

இன்றுவரை அவர் வர்த்தக முன்னேற்றம் தொடர்பில் என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வர்த்தக தொழில்துறை மன்றம் என்று ஒன்று உள்ளது என்பது அமைச்சருக்கு தெரியுமா? என்று கூட எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு