மாகாண தொழற்துறை அமைச்சருக்கு தக்க பதில் கொடுத்த யாழ்.வர்த்தக தொழிற்துறை மன்றம்.

ஆசிரியர் - Editor I
மாகாண தொழற்துறை அமைச்சருக்கு தக்க பதில் கொடுத்த யாழ்.வர்த்தக தொழிற்துறை மன்றம்.

வடமாகாணசபையை வலுப்படுத்தும் நோக்காக கொண்டதே யாழ்.சர்வதேச வர்த்தக க ண்காட்சியாகும். அதனாலேயே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை பிரத ம விருந்தினராக அழைத்திருக்கிறோம். இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சி 8 வருடங்க ளாக நடைபெற்ற ஒன்று இது நேற்று நடந்தது அல்ல. என்பது அனைவருக்கும் தெரியும்.

மேற்கண்டவாறு யாழ்.வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஷ் கூறி யுள்ளார். யாழ்.வர்த்தக தொழிற்துறை மன்றத்தினால் யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி தொடர்பாக தம்முடன் ஒன்றும் பேசப்பட வில்லை. என மாகாண தொழிற்துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி கூறியிருந்தார். 

அமைச்சருடைய இந்த கூற்று தொடர்பாக கேட்டபோதே வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அரசியல் கட்சிகள் சார்ந்து அல் லது தனிநபர் சார்ந்து இந்த கண்காட்சி நடத்தப்படவில்லை. வடமாகாணசiயை வலுப்படுத்துவதே இதன் நோக்கம். அதனாலேயே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ் வரனை பிரதம விருந்தினராக அழைத்திருக்கின்றோம். 

எனவே வடமாகாணசபை பலவீன ப்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. மேலும் தென்பகுதி அரசியல்வாதிகளின் தலை யீடும் இதற்குள் இல்லை. எங்கள் பகுதியை சேர்ந்த சகல அரசியல்வாதிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றோம். எனவே இந்த நிகழ்வு 8 வருடங்களாக நடைபெறும் நிகழ்வு இது அனைவருக்கும் தெரியும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு