9 வது யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இம் மாதம் 26ம், 27ம், 28ம் திகதிகளில்.

ஆசிரியர் - Editor I
9 வது யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இம் மாதம் 26ம், 27ம், 28ம் திகதிகளில்.

யாழ்.வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் 9வது யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இம் மாதம் 26ம், 27ம், 28ம் திகதிகளில் யாழ்.மாநகரசபை மைதானத்தில் நடைn பறவுள்ளது. இக் கண்காட்சியில் உள்@ர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 300 நி றுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்த உள்ளன.

மேற்கண்டவாறு யாழ்.வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஸ் கூறி யுள்ளார். மேற்படி வர்த்தக கண்காட்சி தொடர்பாக யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் ந டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்படி தகவலை கூறினார். இதன் போது மேலும் அவர் கூறுகையில், 2010ம் ஆண்டு யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து 8 ஆண்டுகள் நடைபெற்று 9வது வர்த்தக கண்காட்சி 26ம், 27ம், 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னே ஷ்வரன் கலந்து கொள்ளவுள்ளார். 26ம் திகதி காலை 11.30 மணிக்கு யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி உத் தியோகபூர்வமான ஆரம்பமாகும். 

அதனை தொடர்ந்து யாழ்.மாநகரசபை மைதானத்தில் கண்காட்சி நடைபெறும். இக் கண்காட்சியில் 300ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் காட்சி கூடங்களை அமைக்கவுள்ளன. மேலும் இந்தியாவில் இருந்து 75 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றன. 

இதன் ஊடாக கடந்த காலத்தை போல் மக்கள் பல்வேறு நன்மைகளை அடைவார்கள். கடந்த காலத் தில் மக்கள் இந்த கண்காட்சியில் பங்கெடுத்திருந்த நிறுவனங்களுடன் இணைந்து தங் கள் தொழிலை ஆரம்பித்தார்கள். அதேபோல் பலர் தங்கள் தொழிலுக்கான உபகரணங்களை பெற்றார்கள். 

இவ்வாறு பல்வேறு நன்மைகள் கிடைக் கப்பெற்றன. எனவே கடந்த காலத்தை விடவும் இம்முறை சிறப்பான கண்காட்சியாக அ மையும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு