மத்திய அரசின் வரவு செலவு திட்டத்திற்கு கையை தூ க்கியதற்காக பேசப்பட்ட பேரம் அம்பலமாகியுள்ளது.

ஆசிரியர் - Editor I
மத்திய அரசின் வரவு செலவு திட்டத்திற்கு கையை தூ க்கியதற்காக பேசப்பட்ட பேரம் அம்பலமாகியுள்ளது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மட்டும் வழங்கப்படாததன் பின்ன ணியில், தமிழ்தேசிய கூட்டமைப்பு மத்திய அரசின் வரவு செலவு திட்டத்திற்கு கையை தூ க்கியதற்காக பேசப்பட்ட பேரம் அம்பலமாகியுள்ளது என சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறி யுள்ளார்.

இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊ டகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஸ் பிறேமச்ச ந்திரன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையி ல், 2 கோடி ரூபாய் நிதியை அபிவிருத்திக்காக பெற்றார்கள் என்றால் அதில் தவறிருக்காது.

ஆனால் நாhளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறுகிறார் நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக கொடுக்கப்பட்ட நிதியாகவே இந்த 2 கோ டி ரூபாய் நிதி கொடுக்கப்பட்டதாம். அப்படியானால் நாங்கள் கேட்கிறோம் மேலதிகமாக அபிவிருத்திக்கு கொடுக்கப்பட்ட 2 கோடி ரூபாய் நிதி எதற்காக சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்படவில்லை? 

அனைத்து நடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கெ hடுக்காவிட்டாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏ ன் கொடுக்கப்படவில்லை? இதன் உண்மையான அர்த்தம் மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு கை உயர்த்தியவர்களுக்கே வழங்கப்பட்டது. அப்படியானால் 2 கோடி ரூபாய் நிதி லஞ்சமாகவே பெறப்பட்டிருக்கின்றது. 

தற்போது மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கூறுகிறார் சுரேஸ் பிறேமச்சந்திரன் 4 கோடி பெற்றதாக. ஆம் 4 கோடியை நான் என் கைகளில் வாங்கவில்லை. மக்கள் திட்டத்தை எனக்கு கொடுத்தார்கள். அதi ன நான் அரசுக்கு கொண்டு சென்றேன். அவர்கள் அதனை செய்தார்கள். எனவே கஜதீபனுக்கு கதை தெரியாவிட்டால் தெரிந்து கதைக்கவேண்டும். 

மேலும் 2 கோடி ரூபாய் பெற் றுக் கொண்டதை தமிழ்தேசிய கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் சிலர் மட்டும் தாங்கள் பெறவில்லை எனவும், உறுதிப்படுத்த முடியுமா? எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை நோக்கி கேள்வி எழுப்புவதன் பின்னணி என்ன? என்பதை தமிழ்தேசிய கூட்டமைப்பு வெளிப்படுத்தவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கூறிய கருத்து தொடர்பாக.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபாய் பெற்றமை தெ hடர்பாக வெளிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருக்கிறார். அவருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கூ றியிருந்த கருத்து தொடர்பாக கேட்டபோது. நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஒரு வியாபாரி. 

அதனை தவிர்த்து பார்த்தால் அவர் ஒன்றுமே இல்லாத ஒருவர். அவருi டய மிட்டல்களுக்கு அஞ்சும் நிலையில் நாங்கள் இல்லை. என சுரேஸ் பிறேமச்சந்திரன் மேலும் கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு