நாளை யாழ்ப்பாணம் வருகிறாா் இராணுவ தளபதி சவேந்திர சில்வா..! பல்வேறு

ஆசிரியர் - Editor I
நாளை யாழ்ப்பாணம் வருகிறாா் இராணுவ தளபதி சவேந்திர சில்வா..! பல்வேறு

23வது இராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்தி ர சில்வா நாளை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளாா். 

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளும் இராணுவத் தளபதி நாளை காலை நல்லூர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்கின்றார்.

அதேபோல வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் மற்றும் யாழ் மோவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளதோடு 

பலாலி உயர்பாதுகாப்பு பழைய பகுதிகளையும் பார்வையிட உள்ளார்.அண்மையில் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வாவுக்கு எதிராக 

சர்வதேச நாடுகள் மத்தியிலும் நாட்டில் உள்ள பொது அமைப்புக்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பின் மத்தியில் நாளையதினம் இராணுவத்தளபதி யாழ்ப்பாணத்துக்கான 

விஜயத்தை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு