வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை துர்க்கையம்பாள் தேர்த் திருவிழாவில் பல இலட்சம் ரூபா நகைகள் அபகரிப்பு!!

ஆசிரியர் - Admin
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை துர்க்கையம்பாள் தேர்த் திருவிழாவில் பல இலட்சம் ரூபா நகைகள் அபகரிப்பு!!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்தப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(10) சிறப்பாக இடம்பெற்றது. 

இந்நிலையில் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண் அடியவர்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆறிற்கும் மேற்பட்ட தங்கச் சங்கிலிகள் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளதாகவும்,  மேற்படி திருட்டு நடவடிக்கையில் அடியவர்களுடன் அடியவர்களாக கலந்து கொண்டிருந்த அழகுறத் தன்னை அலங்கரித்து வந்த இளம் பெண்ணொருவரும் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

எனினும், திருட்டுக்களுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதாகவில்லை. 
பொலிஸார், ஆலயத் தொண்டர்கள், சாரணர்கள் மற்றும் சிசிரிவி கமராவின் கண்காணிப்பிற்கு மத்தியிலும் மேற்படி திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளமை பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   

இதேவேளை, வழமை போன்று இம்முறையும் ஆலய மஹோற்சவத்தில் கலந்து கொள்ளும் அடியவர்கள் இயன்றவரை தங்க ஆபரணங்கள் அணிந்து ஆலயத்திற்கு வருகை தருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேவஸ்தான நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு