13ம் திருத்தம் - இந்திய மீனவர் விவகாரம் குறித்து விரிவான பேச்சு..

ஆசிரியர் - Editor I
13ம் திருத்தம் - இந்திய மீனவர் விவகாரம் குறித்து விரிவான பேச்சு..

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்  இலங்கை ஜனாபதியுடன் இலங்கையின் அரசியலமைப்பின் 13 வதுதிருத்தம்  மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்  என இந்திய வெளிவிவாகர அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஐக்கியம் ஆள்புல ஒருமைப்பாடு இறைமை ஆகியவற்றை பேணும் அதேவேளை  தொடர்பில் தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரினதும் சமத்துவம் நீதி கௌவரம் சமாதானம் ஆகியவற்றிற்கான அபிலாசைகளிற்கு இந்தியா ஆதரவளிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவம், மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்துவதும் இந்த நோக்கங்களை அடைய உதவும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்கள் குறித்த இந்தியாவின் கரிசனையை வெளியிட்டார்,அவர்களையும் அவர்களின் படகுகளையும் கூடிய விரைவில் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார், 

மேலும் அவர்களிற்கு எதிராக பெரும் அபராதத்தை விதிப்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு