மறவன்புலவு எல்லைப் பகுதியில் மின் காற்றாலை அமைப்பதற்கு எதிராக போராட்டம்!

ஆசிரியர் - Admin
மறவன்புலவு எல்லைப் பகுதியில் மின் காற்றாலை அமைப்பதற்கு எதிராக போராட்டம்!

தென்மராட்சியில் மின் காற்றாலை அமைக்கப்படுவதற்கு எதிராக பொதுமக்களால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மறவன்புலவு விவசாய கிராமத்தின் எல்லைப் பகுதியில் மின் காற்றாலை அமைக்கப்படுவதற்கு எதிராக நேற்று (வெள்ளிக்கிழமை) பொதுமக்களால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி மின் காற்றாலை அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

எனினும், இந்தத் திட்டத்தை தமது பகுதியில் அமைக்க வேண்டாம் என கடந்த இரண்டு வருடங்களாக அங்குள்ள மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.இதனையடுத்து, குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என இந்த மக்களுக்கு பல தரப்புக்களாலும் வாக்குறுதி அளிக்கப்பட்டு வேலைகளும் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இடை நிறுத்தப்பட்டிருந்த வேலைகள் மீண்டும் நேற்று ஆரம்பிக்கப்பட் நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.நிர்மாணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு பேரணியாக சென்ற மக்கள், வேலைகளை உடனடியாக நிறுத்தி அங்கிருந்து வேலையாட்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு