4207.2 ஏக்கா் காணி தொடா்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்..! ஆளுநருக்கு கடிதம் எழுதிய நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 53 இடங்களில் 4207.2 ஏக்கா் காணி தற்போதும் படையினா்வசம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் குறித்த காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என,
வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனுக்கு நேற்றய தினம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதுடன், 53 இடங்களில் படையினாிடம் உள்ள காணிகள் தொடா்பாக தகவல் திரட்டு ஒன்றையும் கடிதத்துடன் இணைத்து அனுப்பியிருக்கின்றாா்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள இரண்டாயிரத்து 119.7 ஏக்கர் வரையான அரச காணிகளும் இரண்டாயிரத்து 88.13 ஏக்கர்
தனியார் காணிகளும் உள்ளடங்கலாக சுமார் நான்காயிரத்து 207.2 ஏக்கர் காணிகள் இராணுவத்தினர், பொலிஸ் சிவில் பாதுகாப்புத்திணைக்களம், கடற்படையினர் வசமுள்ள்தகாவும் மேற்படி காணிகள் யாவும் அரச திணைக்களங்களாலும்
பொதுமக்களாலும் விடுதலைப்புலிகளாலும் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளாகும். என்று மாவட்டத்தில் நகர வடிவமைப்பை கட்டமைப்பதற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவையை மக்கள் மயப்படுத்துவதற்கும் இடையூறாக உள்ளதுடன்,
மாவட்டத்தை சேர்ந்த பல நூற்றுக்கும் மேற்படி குடும்பங்கள் குடியிருப்பதற்கான காணிகள் இன்றியுள்ளன. இந்த நிலையில் மேற்படி காணிகளை படையினர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இவ்வாறு ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகளை விரைந்து
விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.