நல்­லூர் மந்­தி­ரி­ம­னையை உரிமைகோர எவ்வளவு நெஞ்சழுத்தம்?

ஆசிரியர் - Admin
நல்­லூர் மந்­தி­ரி­ம­னையை உரிமைகோர எவ்வளவு நெஞ்சழுத்தம்?

எவ்­வ­ளவு நெஞ்­ச­ழுத்­தம் இருந்­தால் மந்­தி­ரி­ம­னையை உரிமை­ கோ­ரு­ம் ஒரு ஓலை­யு­டன் எமது அரச திணைக்­க­ளத்­துக்கு வந்­தி­ருப்­பார்? என்று கேள்வி எழுப்­பி­யுள்ளார் வடக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

ஆனைக்­கோட்டை மகா­ஜன சன­ச­மூக நிலை­யத்­தின் 68ஆவது ஆண்டு நிறை­வை­யொட்டி நடத்­தப்­பட்ட விளை­யாட்­டுப் போட்­டி­க­ளுக்­கான மதிப்­ப­ளிப்பு நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

'நல்­லூர் முத்­தி­ரைச் சந்­திப் பகு­தி­யில் அமைந்­துள்ள தமி­ழர்­க­ளின் புரா­த­னச் சின்­னங்­க­ளில் ஒன்­றான மந்­தி­ரி­ம­னையை உரி­மை­கோரி ஓலைச்­சு­வடி ஒன்­று­டன் பெரும்­பான்மை இனத்­த­வர் ஒரு­வர் யாழ்ப்­பா­ணம் காணிக்­கந்தோரில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­த­தாக நீங்­கள் பத்­தி­ரி­கை­யில் படித்­தி­ருப்­பீர்­கள்.

அந்­தப் பெரு­ம­க­னார் சில­வேளை சுந்­த­ர­மூர்த்தி நாய­னா­ரின் கதை­யைப் படித்­துத்­தான் அவ்­வாறு செய்­தாரோ நான­றி­யேன்! சுந்­த­ர­மூர்த்தி நாய­னாரை தடுத்­தாட் கொள்­வ­தற்­காக சாட்­சாத் சிவனே பொய்­யான ஓலைச்­சு­வடி ஒன்­று­டன் தோன்­றி­யது போல இவ­ரும்; பழைய ஓலைச்­சு­வ­டி­யொன்­றைத் தூக்­கிக்­கொண்டு வந்­து­விட்­டார்.

ஆனால் வந்­த­வர் சிவ­னார் அல்ல. அர­சின் அல்­லது சிங்­கள பௌத்­தத்­தின் கையாள் என்­பதை நாம் உணர வேண்­டும். எவ்­வ­ளவு நெஞ்­ச­ழுத்­தம் இருந்­தால் இவ்­வா­றா­ன­தொரு ஓலை­யு­டன் எமது அரச திணைக்­க­ளம் ஒன்­றுக்கு வந்­தி­ருப்­பார்?

சில திணைக்­க­ளங்­களை சிங்­கள பௌத்த அர­சா­னது தமது தேவை­க­ளை முழுமையாகச் செய்­யப் பாவித்து வரு­கின்­றார்­கள். நீரி­யல் திணைக்­க­ளம், கனி­ய­வ­ளங்­கள் திணைக்­க­ளம், வன இலாகா, தொல் பொருள் திணைக்­க­ளம், வன­வி­லங்­குகள் திணைக்­க­ளம் என பல திணைக்­க­ளங்­க­ளை­யும் மற்­றும் மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை உள்­ள­டங்­கிய அதி­கா­ர­ச­பை­க­ளை­யும் இவ்­வா­றான ஓலைச்­சு­வடி போன்ற பல புனை­க­தை­க­ளு­டன் தான் அவற்றை வழி­ந­டத்தி வரு­கின்­றன என்று கொள்ள இட­மி­ருக்­கின்­றது. என­வே­தான் நாம் விழிப்­பு­ ணர்­வு­டன் செய­லாற்ற வேண்­டு­மென குறிப்­பி­டு­கின்றேன்.

இன்­றைய சூழ­லில் தமி­ழர்­க­ளுக்­கென்று ஒரு தனி­யான தொடர்­பு­டைய பிர­தே­சம் இருக்­கக்­கூ­டாது என்­ப­தில் அரசு முனைப்­பு­டன் செயற்­பட்டு வரு­கின்­றது. இது­போன்ற கெடு­பி­டி­கள் தான் அரை நூற்­றாண்­டுக்கு முன்­னர் வேறு எந்த வழி­மு­றை­க­ளும் காணப்­ப­டாத நிலை­யில் ‘சாம பேத தான தண்­டம்’ என்ற நான்­கி­லும் இறுதி வழி­மு­றைக்கு இளை­ஞர்­க­ளைத் தூண்­டி­யது.

போராட்­டத்தை முடி­வுக்­குக் கொண்டு வந்­து­விட்­ட­தாக எண்ணி அரசு மார்­தட்­டிக் கொள்­ள­லாம். ஆயு­தங்­கள் மௌனிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம். ஆனால் தமி­ழர்­க­ளின் உணர்­வு­கள் மௌனிக்­கப்­ப­ட­வில்லை என்ற விட­யத்தை அர­சும், பெரும்­பான்மை ஆதிக்­க­வி­ய­லா­ளர்­க­ளும் நன்கு தெரிந்து கொள்ள வேண்­டும்.

மூன்­றா­வது ஒரு சக்தி அர­சுக்கு நெருக்­க­டி­க­ளைக் கொடுக்­கின்­ற­போது அதனை வெல்­வ­தற்கு தமிழ் மக்­க­ளின் ஆத­ர­வைத் தேடி அரசு முழந்­தா­ளிட்டு நிற்­கின்ற ஒரு நிலை விரை­வில் ஏற்­ப­ட­லாம். அப்­பொ­ழு­தும் எமது தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் நிபந்­த­னை­கள் எது­வு­மற்ற ஆத­ரவை வழங்­கத் தயா­ராக இருப்­பார்­களோ நான் அறி­யேன். என­வே­தான் மக்­கள் சக்­தி­யா­கிய அந்த மாபெ­ரும் சக்­தியை நாங்­கள் எல்­லோ­ரும் சேர்ந்து மேலோங்­கச் செய்ய வேண்­டும். அந்த வகை­யில் தமிழ் மக்­க­ளின் ஒற்­றுமை பலப்­ப­டுத்­த­பட வேண்­டும் என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு