மீண்டும் விலை குறைந்த ஒப்போ ஸ்மார்ட்போன்(ஸ்)!!

ஆசிரியர் - Admin
மீண்டும் விலை குறைந்த ஒப்போ ஸ்மார்ட்போன்(ஸ்)!!

ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது இரண்டு ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடியாக விலை குறைத்துள்ளது. 

சீன நிறுவனமான ஒப்போ கடந்த ஆண்டு இந்தியாவில் ஒப்போ எஃப்11 மற்றும் ஒப்போ எஃப்11 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ.19,990 மற்றும் ரூ.24,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

அதை தொடர்ந்து இரு ஸ்மார்ட்போன்கள் மீதும் விலை குறைக்கப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய விலை விவரம் பின்வருமாறு...  

1. ஒப்போ எஃப்11 4 ஜிபி ராம், 128 ஜிபி ரூ.16,990 

2. ஒப்போ எஃப்11 6 ஜிபி ராம், 128 ஜிபி விலை ரூ.17,990 

3. ஒப்போ எஃப்11 ப்ரோ 6 ஜிபி ராம், 128 ஜிபி ரூ.21,990 

4. ஒப்போ எஃப்11 ப்ரோ 6 ஜிபி ராம், 64 ஜிபி ரூ.20,990 

இந்த விலை குறைப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது தெரியாத நிலையில், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனை தளத்தில் இந்த விலை குறைப்பு பிரதிபலித்துள்ளது. 

Radio
×