ஆட்கொனர்வு மனுவின் விசாரணை எதிர்வரும் மார் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor I
ஆட்கொனர்வு மனுவின் விசாரணை எதிர்வரும் மார் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாவற்குழியில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் 3 உறவினர்களால் யாழ்.மேல் நீதிமதன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொனர்வு மனுவின் விசாரணை எதிர்வரும் மார் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன் போது வழக்கின் முதலம் எதிரியான மேஜர் ஜென்ரல் துமிந்த கெப்பற்றி பொலாவினை மன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.

நாவற்குழிப் பகுதியில் கடந்த 1996 நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட 3 பேருடைய உறவினர்கள் சட்டத்தரணி கே.சுகாசினி ஊடாக யாழ்.மேல் நீதிமன்ற்ததில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆட்கொனர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது மனு தாரர்கள் சார்பில் சட்டத்தரணி கே.சுகாசினியுடன், சட்டத்தரணி கு.குருபரன் தோன்றியிருந்தார்.

எதிர்மனுதாரர்கள் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்துடன், பிருந்தா குணரட்னமும் தோன்றியிருந்தார். இராணுவத் தரப்பின் நலம்காக்கும் வகையில் சட்டத்தரணியும் இராணுவ அதிகாரியுமான ஜனாத் ஜெயதுங்களும் மன்றில் தோண்றியருந்தார்.

இதன் போது மனுதாரர் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணிகள் இவ்வழக்கின் முதலாம எதிர் மனுதாரர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆஜராகக் கூடாது என்ற வாதத்தினை முன்வைத்திருந்தனர்.

இருப்பினும் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் தோண்றிய அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந் எதிர் மனுதாரர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மன்றில் தோண்ற சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இரு தரப்பு சட்டத்தரணிகளின் ஆட்சேபனைகள் மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பில் நீதிபதி மா.இளஞ்செழியன் குறித்த வழக்கில் முதலாம் எதிரமனுதாரர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மன்றில் தோன்ற முடியுமா? என்பது தொடர்பில் இரு தரப்பினர்களும் மன்றில் எழுத்து மூலமான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும், அதுவரையில் குறித்த வழக்கினை எதிர்வரும் மார்ச் சமாதம் 2 ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாகவும் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இதன் போது முதலாம் எதிர் மனுதாரர் மன்றில் முன்னிலையாகி அவர் சார்பான சமர்ப்பணத்தை மன்றில் வழங்க வேண்டும் அறிவுறுத்தினார்.

இவ்வறிவுறுத்தலுக்கு அமைய அது தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலேசனை நடத்தி முதலாம் மனுதாரரை மன்றில் முன்னிலையாக்குவது தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக நடவடிக்கை மேற்கொள்வதாக

மன்றில் இராணுவம் சார்பான நலம்காக்கும் வகையில் தோன்றிய சட்டத்தரணியும், இராணுவ அதிகாரியுமான ஜனாத் ஜெயதுங்க மன்றில் ஒப்புக் கொண்டிருந்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு