1996 ஆம் ஆண்டு அதிகளவானர்கள் காணாமல் போகச் செய்த இராணுவ அதிகாரி துமிந்த கெப்பற்றி பொலாவக்கு பதவி உயர்வு.

ஆசிரியர் - Editor I
1996 ஆம் ஆண்டு அதிகளவானர்கள் காணாமல் போகச் செய்த இராணுவ அதிகாரி துமிந்த கெப்பற்றி பொலாவக்கு பதவி உயர்வு.

நாவற்குழிப் பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு அதிகளவானர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரி துமிந்த கெப்பற்றி பொலாவக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு மேஜர் ஜென்ரல் பதவி வழங்கப்பட்டு மன்னாரில் உள்ள 66 ஆவது படைப்பிரிவின் பொறுப்பதிகாரியாக தற்போது கடமையாற்றுவதாகவும், அவருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொனர்வு மனுமீதான விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு நாவற்குழிப் பகுதியில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் 3 பேரினால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அம் மனுவில் முதலாம் எதிர்மனுதாரராக அக் காலப்பகுதியில் நாவற்குழியில் இருந்த படைமுகாம் பொறுப்பதிகாரியான துமிந்த கெப்பற்றி பொலாவயின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது எதிர்மனுதாரர்கள் தொடர்பில் மன்றில் தோன்றும் சட்டமா அதிபர் திணைகளத்தினால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே குறித்த இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டு, தற்போதும் அவர் இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு