இராணுவத்திற்கு எதிரான குற்றப் பகிர்வு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டிய சட்டமா அதிபர் திணைக்களமே அதே இராணுவத்திற்கு சார்பாக மன்றில்.

ஆசிரியர் - Editor I
இராணுவத்திற்கு எதிரான குற்றப் பகிர்வு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டிய சட்டமா அதிபர் திணைக்களமே அதே இராணுவத்திற்கு சார்பாக மன்றில்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைக்காக இராணுவத்திற்கு எதிரான குற்றப் பகிர்வு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டிய சட்டமா அதிபர் திணைக்களமே அதே இராணுவத்திற்கு சார்பாக மன்றில் தோன்றுவதற்கு சட்டத்தரணி கு.குருபரன் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

நாவற்குறியில் காணாமல் ஆக்கப்பட்ட 3 பேருடைய ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை யாழ்.மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் மனு தாரர் சார்பில் தோன்றிய போதே சட்டத்தரணி கு.குருபரன் மன்றில் கடும் ஆட்சேபனையினை வெளியிட்டுள்ளார்.

இவ்வழக்கின் 2 ஆம் எதிர்மனுதாரான இராணுவத்தளபதி மற்றும் 3 ஆம் எதிர்மனுதாரான சட்டமா அதிபர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் தோன்றுவதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை.

முதலம் எதிர்மனுதார் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மன்றில் தோன்றுவதை நான் ஆட்சேபிக்கின்றேன். இவ்வாட்சேபனைக்காக காரணங்களையும் சட்டத்தரணி குருபரம் மன்றில் விபரித்திருந்தார்.

2002, 2003 ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பில் விசாரணையை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த விசாரணையல் நாவற்குழி முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த துமிந்த கப்பற்றி பொலாவ தான் காணாமல் போனவர்களுக்கு பொறுப்பு சொல்லவேண்டும் என்ற வகையில் விசாரணை முடிவுகள் இருந்தது.

இந்நிலையில் இந்ந நிலையில் இவ்வழக்கில் முதலாம் எதிர் மனுதாராக அணைக்கப்பட்டுள்ள மேஜர் ஜென்ரல் துமிந்த கப்பற்றி பொலாவைக்கு சார்பாக மன்றில் தோன்றும் சட்டமா அதிபர் திணைக்களம், அவருக்கான பதிலினை மன்றில் அணைப்பதன் ஊடாக அரசும் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்களா என்று சட்டத்தரணி கு.குருபரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் உயர் நீதிமன்ற்ததில் நடைபெறும் வழமையாக சித்திரவதை, அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போது சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கும் எமக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறி எதிரிகள் சார்பில் ஆஜராவதில்லை.

இந்நிலையில் தற்போதைய வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மனுவின் முதலாம் எதிரி சார்பில், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் உண்மை என்று நிரூபிக்கப்படும் போது அரசாங்கத்திற்கும் அதில் கூட்டுப் பொறுப்பு, அதாவது தனிப்பட்ட நபருக்கு இருக்கும் பொறுப்பிற்கு மேலதிகமாக அரசுக்கும் பொறுப்பு உள்ளதா? இல்லை தனிப்பட்ட நபருக்குத்தான் பொறுப்பு என்றால், இலங்கை மக்களின் வரிப்பணத்தில் செயற்படுகின்ற சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம் இழைத்திருக்கக கூடிய இராணுவ அதிகாரிக்காக ஆஜராவார்கள்? என்றும் சட்டத்தரணி தொடர்ந்து மன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜ.நா மனித உரிமை ஆணையாளர் இராணுவத்தினால் இங்கு இளைக்கப்பட்ட கொடுமைகள், யுத்த மீறல்கள் என்பன வெறுமனே தனிப்பட்ட நபர்களுடைய குற்றங்கள் மாத்திரம் அல்ல. அவை பரவலாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் நடைபெற்ற கட்டமைப்பு சார் குற்றங்கள். இதனால் அக் குற்றங்களுக்கு அரசும் பொறுப்புக் கூற வேண்டும்.

இவ்வாறான இராணுவத்தால் மக்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் யுத்தக் மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதாக அரசாங்கம் ஜெனீவாவில் ஒப்புக் கொண்டுள்ளது.

இதன்படி இவ்வழக்கின் முதலாம் எதிர்மனுதாரர் குற்றங்களுக்கு பொறுப்பானவர் என்பதை அரசாங்கம் கண்டு கொண்டால், அரசாங்கம் அக் குற்றங்களின் பொறுப்பினை பொறுப்பேற்றுக் கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் சொல்ல வேண்டும்.

இருப்பினும் மேஜர் ஜென்ரலும் தனது தனிப்பட்ட பொறுப்புக் காரமாண காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் மன்றுக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த நிலையில் இந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மையை கண்டறிவதுதான் நோக்கமாக இருந்தால் அரசாங்கம் இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக மன்றில் ஆஜராகக் கூடாது.

எனவே குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்காக சட்டமா அதிபர் திiணைக்களம் மன்றில் வாதிடுவதற்கு எதிரான கட்டளையினை மன்று பிறப்பிக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி கு.குருபரன் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு