இரண்டு 40 எம்.பி. கமராவுடன் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்!

ஆசிரியர் - Admin
இரண்டு 40 எம்.பி. கமராவுடன் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்!

ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இரண்டு 40 எம்.பி. பிரைமரி கமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. மேட் 30 ப்ரோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மேட் 20 சீரிசின் மேம்பட்ட மாடல் ஆகும். ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அந்தவகையில் இதுவரை வெளியாகியான தகவல்களில் மேட் 30 சீரிஸ் ஸ்மார்ட்போனில் குவாட்-கேமரா செட்டப் சதுரங்க வடிவில் பொருத்தப்படும் என கூறப்பட்டது. இது பார்க்க மேட் 20 சீரிஸ் போன்று காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி புதிய மேட் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் இதில் இரண்டு 40 எம்.பி. சென்சார்கள், ஒரு 8 எம்.பி. சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் 40 எம்.பி. கேமராவில் 1/1.5” சென்சார், f/1.4 கொண்டிருக்கும். இத்துடன் RYYB பிக்சல் லே-அவுட் வழங்கப்படும் என தெரிகிறது.

இரண்டாவது 40 எம்.பி. கேமரா அல்ட்ரா-வைடு லென்ஸ் 120 டிகிரி ஃபீல்டு-ஆஃப்-வியூ மற்றும் 1/1.7” சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மூன்றாவது 8 எம்.பி. கேமராவில் டெலிபோட்டோ லென்ஸ் 5X சூம் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஹூவாய் மேட் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆனது. இதில் புதிய ஸ்மார்ட்போன் அகலமான நாட்ச் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் முந்தைய மேட் 20 சீரிசை விட அதிகளவு மாற்றங்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ போன்று புதிய மாடலில் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதில் கிரின் 985 சிப்செட், 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 55 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புது ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை.

எனினும், ஹூவாயின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட் 30 ப்ரோ தவிர மேட் 30 ஸ்மார்ட்போன் மற்றும் 5ஜி வேரியண்ட் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிகிறது.

Radio
×