SuperTopAds

பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக இலங்கைத் தமிழர்!

ஆசிரியர் - Admin
பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக இலங்கைத் தமிழர்!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா என்ற இலங்கைத் தமிழர் நியமிக்கப்படவுள்ளார். வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ் சேவைகள் சபை அறிவித்துள்ளது.

நிஷான்( நிஷ்) துரையப்பா பிராந்திய மாவட்ட நடவடிக்கை பிரிவின் பிரதி பொலிஸ் தலைமை அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். ஹல்டன் பிராந்தியத்தில் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பீல் நகர பிராந்திய பிரதி பொலிஸ் தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றார்.

25 ஆண்டுகள் சேவை அனுபவம் கொண்டுள்ள துரையப்பா, குற்ற விசாரணைப் பிரிவின் கீழ், போதைப் பொருள் ஒழிப்பு, துப்பாக்கி, பாதாள உலக குழுக்கள் தொடர்பான விடயங்களை கையாண்டுள்ளார். அவர் சிறப்பு அதிரடிப்படை பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

துரையப்பா பொலிஸ் சேவையில் அடுத்த தலைமுறைக்கு தலைமை தாங்குவார் என பீல் பிராந்திய பொலிஸ் சேவை சபையின் பிரதான அதிகாரி Nando Iannicca தெரிவித்துள்ளார்.

மூவாயிரம் பேரை கொண்ட பீல் பிராந்திய பொலிஸ் சேவையில் பிரதான தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா நியமிக்கப்பட்டுள்ளார். பீல் தலைமை பொலிஸ் அதிகாரியாக Chris McCord கடமையாற்றி வருகிறார்.