போர் குற்றங்கள் 2009ம் ஆண்டு மட்டும் நடக்கவில்லை.

ஆசிரியர் - Editor I
போர் குற்றங்கள் 2009ம் ஆண்டு மட்டும் நடக்கவில்லை.

போர் குற்றங்கள் 2009ம் ஆண்டு மட்டும் இடம்பெறவில்லை. அது தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்கின்ற து. இங்கே போர்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்கின்றது என்பதை காட்டுவதன் ஊடாக யார் தண்டணை பெறவேண்டியவர் என்பதை ஆராய்ந்து நடுநிலை யான நீதிமன்றம் ஒன்றை உருவாக்கி குற்றவாளிகளுக்கு தண்டணைகளை பெற்று கொடுக்கலாம்.

மேற்கண்டவாறு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா கூறியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஒழுங்கமைப்பில் இடைக்கால அறிக்கை- மாயைகளை கட்டுடைத்தல் என்னும் தலைப்பில் விசேட கலந்துரையாடல் மற்றும் கருத்தாய்வை நேற்று யா ழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஒழுங்கமைத்திருந்தது. 

இந்நிகழ்வில் வடகிழக்கு தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம் என்னும் தலைப்பில் உரையாற்றும்போதே பேராசிரியர் முத்துக்குமாரசரி சொர்ணராஜா மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

உலகில் பல இட ங்களில் போர் குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. அங்கெல்லாம் அவற்றை ஆ ராய்வதற்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அதன் வழியை ஆராய்ந்து நாமும் ஒரு நடுநிலையான நீதிமன்றத்தை உருவாக்கவேண்டும். 

மேலும் போர் குற்றங்கள் 2009ம் ஆண்டு மட்டும் நடைபெறவில்i ல. 1958ம் ஆண்டும் தொடக்கம் நடைபெற்றது. எனவே இது தொடர்ச்சியானது என்பதை காண்பித்து, த ண்டணை பெறவேண்டியவர்கள் யார் என்பதை ஆராய்ந்து நாங்கள் ஒரு நடுநிலையான நீதிமன்றத்i த உருவாக்க சாத்தியங்கள் உள்ளது. அது நாளைக்கே நடக்கும் என நான் சொல்வதற்கில்லை. 

ஆனால் ஒரு காலத்தில் நடக்கலாம். எனவே நீங்கள் உங்களுக்கு தெரிந்த போர்குற்றங்களை ஆவணப்படு த்தி வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சாசனத்தில் இலங்கை கை யொப்பமிடுவதற்கு அழுத்தங்களையும் கொடுக்கவேண்டும். 

அதன் ஊடாக எதிர்காலத்தில் குற்றவியல் நீ தி மன்று அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படும் நிலை உருவாகும் சாத்தியங்கள் உள்ளன என கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு