அரசியல் பேச கூடாது என எந்த ஐனநாயக கட்டமைப்பிலும் கூறப்படவில்லை.

ஆசிரியர் - Editor I
அரசியல் பேச கூடாது என எந்த ஐனநாயக கட்டமைப்பிலும் கூறப்படவில்லை.

அரசியல் விவாதங்களை தடுப்பது ஜனநாயக விரோதம் என்பதுடன் அரசியல் பேசாதீர்கள் என ஜன நாயக கட்டமைப்பில் எங்கேயும் கூறப்படவில்லை. என கூறியிருக்கும் யாழ்.பல்கலைக்கழக சட்டத் துறை விரிவுரையாளரும் சட்டத்துறை தலைவருமான குமார வடிவேல் குருபரன், தமிழ் மக்கள் பேரவை யின் இந்த கலந்துரையாடலை நிறுத்துமாறு தேர்தல் திணைக்களத்திடம் கேட்டவர்கள் யார்? என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக அறிந்து.

அவர்களை சந்தித்து தமிழர்களின் அரசியலலை குறு கிய வட்டத்திற்குள் கொண்டுவராதீர்கள் என கூறுவேன் எனவும், இதை விட மோசமாக நடக்குமா? எ ன எண்ணும் அளவுக்கு நீதி துறை மற்றும் தேர்தல் திணைக்களத்தின் செயற்பாடுகள் அமைவதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். 

தமிழ் மக்கள் பேரவையின் ஒழுங்கமைப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் தேர்தல் திணைக்களத்திற்கு கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நிறுத்தப்பட்டது. 

பின்னர் அந்த கலந்துரையாடல் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அதற்கும் புகாரி கொடுக்கப்பட்டு அதனையும் நிறுத்துமாறு தேர்தல் திணைக்களம் கூட்டுறவு திணைக்க ளத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. எனினும் கலந்துரையாடல் திட்டமிட்டபடி வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. 

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும்போதே குமாரவடிவேல் குருபரன் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில். இதனை விடவும் மோசமாக நடக் குமா? என கேட்கும் அளவுக்கு நீதி துறை மற்றும் தேர்தல் திணைக்களம் ஆகியவற்றின் சில நடவடிக் கைள் உள்ளன. தமிழ் மக்கள் பேரவை இந்த கலந்துரையாடலை யாழ்.பல்கலைக்கழகத்தில் ஒழுங்கமைத்தபோது நிறுத்துமாறு தேர்தல் திணைக்களம் கடிதம் எழுதியது. 

பின்னர் வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றப்பட்டபோது அதனையும் நிறுத்தும்படி தேர்தல் திணைக்களம் கூட்டுறவு திணைக்களத்திற்கு கடி தம் எழுதியது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் விடயம் இந்த கலந்துரையாடலில் அரசியலமைப்பு ப ற்றி பேசப்படுவதால் ஒரு தரப்புக்கு சாதகமாகவும், மற்ற தரப்புக்கு பாதகமாகவும் அமையலாம் என கூறப்பட்டுள்ளது. 

அரசியல் பேச கூடாது ஜனநாய கட்டமைப்பில் எங்கும் சொல்லப்படவில்லை. மேலும் அர சியல் விவாதத்தை நடத்துவது ஜனநாயக விரோதமான செயற்பாடுமாகும். சிலர் மக்களை ஏமாற்றி ஒற் றை பரிமாணத்தில் செய்திகளை ஊகங்கள் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என நினைக்கிறார்க ள். அமெரிக்க ஜனாதிபதி சில ஊடகங்களை பேக் நியூஸ் என கூறுகிறார். 

அதேபோல் இங்கேயும் சிலர் பேக் நியூஸ் என கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுவதும், எங்களை போன்றவர்கள் மக்கள் மத்தியில் அரசியல் பற்றி பேசுவதும் ஜனநாயகத்தின் அடிநாதம். எனவே இந்த புகார்களை வழங்கியவர் யார்? என்பதை தகவலறியும் உரிமை சட்டத்தின் ஊடாக அறிந்து தமிழர் அரசிய லை குறுக்காதீர்கள், குறுகிய வட்டத்திற்குள் கொண்டுவராதீர்கள் என கூறுவேன் என கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு