புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா..!

ஆசிரியர் - Admin
புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா..!

இந்த டிஸ்ப்ளேயில் பேட்டரி அளவு, எரிபொருள் விவரம், ஆயில் மாற்றக் கோரும் இன்டிகேட்டர், தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கப்படுகிறது. இத்துடன் சார்ஜிங் சாக்கெட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வாகனச் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஹோண்டா நிறுவனம், 150சிசி திறன் கொண்ட ஹோண்டா X-ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் மாடலை கைகின்டோ இந்தோனேசிய ஆட்டோ விழாவில் காட்சிப்படுத்தியது. 

இந்த ஸ்கூட்டரில் 149.3 CC சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.2 BHP பவர் @8500 RPM., 13.8 NM Torque @6500 RPM செயல்திறன் கொண்டது. இத்துடன் வழக்கமான வி-மேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 46 கி.மீ., வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் LED லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயில் பேட்டரி அளவு, எரிபொருள் விவரம், ஆயில் மாற்றக் கோரும் இன்டிகேட்டர், தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கப்படுகிறது. இத்துடன் சார்ஜிங் சாக்கெட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

ஹோண்டா X-ADV 150 ஸ்கூட்டர், 1950 MM நீளம், 763 MM  அகலம், 1153 MM உயரமாக இருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 MM ஆகும். மேலும், இந்த ஸ்கூட்டரின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின்-கேஸ் சார்ஜ் ஷோவா ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் முன்புறம் 240 MM பெட்டல் டிஸ்க், பின்புறம் 220 MM டிஸ்க் வழங்கப்படுகிறது. ஹோண்டா நிறுவனம் இந்த புதிய ஸ்கூட்டரை இந்தோனேசியாவில், ABS மற்றும் CBS ஸ்டார்ட்-ஸ்டாப் என இருவித வேரியண்ட்களில் விற்பனை செய்கிறது. 

இந்தியாவில் விற்பனைக்கு வரும் போது இந்த மாடலுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 

Radio
×