எதிரிகளை எதிர்பது சுலபம். ஆனால் துரோகிகளை எதிர்ப்பது கடினம்.

ஆசிரியர் - Editor I
எதிரிகளை எதிர்பது சுலபம். ஆனால் துரோகிகளை எதிர்ப்பது கடினம்.

எங்களின் எதிரிகளை தடுப்பது மிக சுலபம். ஆனால் எங்களுடன் கூட இருந்து கொண்டு எதிரிகளைபோல் செயற்படுகிறவர்களை தடுப்பது மிக கஷ்டம் என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், ஆகவே மக்கள் இந்த புதிய அரசியலமைப்புக்கான இi டக்கால அறிக்கை தொடர்பாக விழிப்பாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தவேண்டியுள்ளது.

மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். தமிழ்மக்கள் பேரவையின் ஒழுங்கமைப்பில் இடைக்கால அறிக்கை- மாயைகளை கட்டுடைத்தல் என்னும் த லைப்பில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் விசேட கலந்தாய்வு மற்றும் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த கலந்தாய்வு மற்றும் கலந்துரையாடலின் நிறைவில் மக்கள் கேள்விகளை கேட்பதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. 

இதன்போது தமிழ் மக்களுக்கு பாதகமான இ ந்த இடைக்கால அறிக்கையை எப்படி எதிர்ப்பது? போர்குற்றங்களுக்கான நீதி வேண்டி முதல மைச்சர் தலமையில் குழு ஒன்று ஜெனீவா செல்ல முடியாதா? என இரு கேள்விகள் கேட்கப்ப ட்டது. இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

 மேலும் அவர் பதிலளிக்கையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக் கின்றார்கள் என காண்பிப்பதே தடுப்பதற்கான வழி. இவ்வாறு பேசினால் தருவதையும் தரமாட் டார்கள் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு தேவையில்லாததை அல்லது பொருத்த மில்லாததை தந்து என்ன பயன்? எனவே இதன் பின்னணியில் பல முரணான விடயங்கள் இருக்கின்றது. 

மேலும் எங்களுடைய எதிரியை எதிர்ப்பது மிக சுலபமான விடயம் ஆனால் எங்களு டன் இருந்து கொண்டு எதிரிகள்போல் செயற்படுபவர்களை எதிர்ப்பது மிகவும் கடினமான விடய மாகும். இதற்கு மேலதிகமாக ஒரு விடயம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதை ஏற்கலாம் என்பது பிழையான விடயமாகும். வேண்டுமானால் வடகிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த மற்றய மாகாணங்களுக்கு அந்த நடைமுறையை வைத்திருக்கலாம். 

இதனை நான் பல இ டங்களில் கூறினேன். அதனால் பலருக்கு என்மீது கடுமையான கோபம் உண்டாகியிருக்கின்றது என முதலமைச்சர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு