எம்.ஜீ.இராமச்சந்திரனின் 101வது பிறந்தநாள்.

ஆசிரியர் - Editor I
எம்.ஜீ.இராமச்சந்திரனின் 101வது பிறந்தநாள்.

இந்திய முன்னாள் நடிகரும் மறைந்த எம்.ஐி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) 101 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இன்று யாழ்.கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள (எம்.ஐி.ஆர்) சிலைக்கு முன்பாக நடைபெற்றது.

யாழ் கல்வியங்காடு பகுதில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மற்றும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதுவர் என்.நடராஐன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.அதனை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ஆதரவாளர்களும் ரசிகர்களும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 

இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உடுபுடவைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.கல்வியங்காடு பகுதில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் சிலை எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான சுந்தரலிங்கம் தனது சொந்த நிதியில் நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு