பியர் விலை குறைப்புக்கான அரசின் காரணம் வேடிக்கையானது.

ஆசிரியர் - Editor I
பியர் விலை குறைப்புக்கான அரசின் காரணம் வேடிக்கையானது.

போதையற்ற நாடு என்னும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இன்று பியர் விலை யை குறைத்து போதை மிகுந்த நாடாக மாற்றுவதற்கு நினைக்கிறதா? என கேள்வி எழுப்பியிருக்கும் மா காணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், வடகிழக்கு மாகாணங்களில் பியர் விலை குறைப்பு பாரிய தாக்கத்தை உண்டாகும் எனவும் அரசாங்கம் பியர் விலை குறைப்பு தீர்மானத்தை மாற்றவேண்டும் எனவும் கேட்டார்.

2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பியர் விலை குறைக்கப்பட்டிருக்கும் நிலையில் மேற்படி வி டயம் தொடர்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கு ம்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நல்லாட்சி அ ரசாங்கம் போதையற்ற நாடு என்னும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்தது. உடனடியாகவே மதுபானம் ம

ற்றும் சிகரட் விலைகளை உயர்த்தியது. தற்போது 2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பியர் விலையை குறைத்துள்ளது. இதன் ஊடாக நல்லாட்சி அரசாங்கத்தின் போதையற்ற நாடு கோஷம் போ தையான நாடாக மாற்றப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் பியர் விலை குறைப்பு தொடர்பில் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும். மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என நம்பி

யிருந்த நிலையில் பியர் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பியர் விலை குறைப்பானது வடகிழக்கு மா காணங்களில் பாரியளவு தாக்கத்தை உண்டாக்கும். பியர் விலை குறைப்புக்கு நிதி அமைச்சர் கூறியிருக்கு ம் காரணம் சிரிப்பை உண்டாக்குவதாக உள்ளது. சட்டவிரோத மதுபான உற்பத்தியை கட்டுப்படுத்த பியர் விலையை குறைப்பது தீர்வாக அமையாது. சட்டவிரோத மதுனா பாவனையை கட்டுப்படுத்த இறுக்கமா

ன கட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்படவேண்டுமே தவிர பியர் விலையை குறைத்தால் சட்டவி ரோத மதுபான உற்பத்தி குறையாது. அதேபோல் பியர் விலை குறைப்புக்கு தமிழ் அரசியல்வாதிகளும் எதி ரான தங்கள் கருத்துக்களை கூறவேண்டும்.

வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக...

யாழ்.கோண்டாவிலில் பொலிஸார் மீத வாள்வெட்டு சம்பவம் நடந்த உடனேயே வாள்வெட்டு சம்பவங்க ளுடன் சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள். ஆனால் தற்போது நடைபெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. எனவே இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்களுக்கு பொலிஸார் உடந்தையாக இருக்கிறார்களா? என்

னும் சந்தேகம் எழுகின்றது. எனவே வாள்வெட்டு குழுக்கள் முற்றாக கட்டுப்படுத்தவேண்டும். அதேபோல் இந்த மாதம் அதிகளவான வாள்வெட்டு சம்பங்கள் நடைபெற்றிருக்கின்றது. இது மாவீரர் மாதத்தில் அப்பாவி இளைஞர்களை கைது செய்வதைனை நோக்கமாக கொண்டதா? எனவும் எமக்கு சந்தேகங்க ள் இருக்கின்றன. எனவே விசேட பொலிஸ் குழுக்களை அமைத்து வாள்வெட்டு சம்பங்களுடன் தொடர்பு

டையவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க ப்படவேண்டும். அதேசமயம் வாள்வெட்டு சம்பங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பெ யரில் கைது செய்யப்பட்டவர்களுக்காக ஆஜராகும் சட்டத்தரணிகளும் சமூக பொறுப்பை உணர்ந்து கொள்ளவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு