மல்லாகம் நீதிமன்றிலிருந்து தப்பியோடியவர் கைது.

ஆசிரியர் - Editor I
மல்லாகம் நீதிமன்றிலிருந்து தப்பியோடியவர் கைது.

யாழ்.கோண்டாவில் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட இ ளைஞர் ஒருவர் நேற்று பிணையில் விடுத லை செய்யப்பட்டு இன்று மல்லாகம் நிதிம ன்றில் வேறு வழக்கில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் நீதமன்றிலிருந்து தப்பி ஓடிய நி லையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள் ளார்.

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறு பொது மக்கள் மீதான வாள்வெட்டுக்களின் தொடராக பொலிஸார் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த்து.

இதனையடுத்து விசேட பொலிஸ் குழுக்கள் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் பலரும் களமிறக்கப்பட்டு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டுருந்தனர்.

இதன் போதே நிஷா விக்ர்ர் என்ற நபரும் பயங்கரவாத குற்றதடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தி பல மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் ஒரு வாள்வெட்டுச் சம்பவத்திற்காக யாழ் நிதிமன்றம் நேற்று பிணை வழங்கியிருந்து. ஆனாலும் அவரை யாரும் நேற்று பிணை எடுக்கவில்லை என்று தெரிய வருகிறது.

அதே நேரம் வேறு பல வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பிலும் நீதி மன்றங்களில் வழக்குகளும் அவருக்கு இருக்கின்றது. இதற்கமைய மல்லாகம் நீதி மன்றில் இருக்கின்ற ஒரு வழக்கிற்காக சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் இன்று காலை மல்லாகம் நீதி மன்றம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றிலிருந்த கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் நீமிமன்றிலிருந்து தப்பியோடியுள்ளார்.இவ்வாறு நீதிமன்றிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த்து.

இதன் போது சுதாகரித்து கொண்டு தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் சில மணிநேரத்திலேயே அவரை மடக்கி பிடித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு