தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இந்தியா- தமிழகத்திற்கு கப்பலில் செல்லலாம். மிகவிரைவில்..
யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை மற்றும் கொழும்பு துறைமுகங்களில் இருந்து இந்தியா- தமிழகத்திற்கு இரு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுக அதிகாரசபை தலைவா் கவன் ரத்நாயக்க கூறியுள்ளாா்.
காங்கேசன்துறை மற்றும் காரைக் கால் துறை முகங்களை இணைக்கும் வகையிலும், அது போன்று கொழும்பு- –தூத்துக்குடி துறை முகங்களை இணைக்கும் வகையிலும், இரண்டு பயணி கள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம்,
இருதரப்பு வணிகச் செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். பயணி கள் கப்பல் சேவையின் மூலம், சுற்றுலாத் துறைக்கும், சிறிய அளவிலான வணிகத்துக்கும் அடிப் படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
தென்னிலங்கையில் இருந்து இந்தியாவுக்குப் பயணிக்கும் பௌத்த சுற்றுலாப் பயணிகளுக்கும் இது சாதகமாக இருக்கும். காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அருகாமையில் வாழும் சமூகங்க ளுக்கு வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அத்துடன், சீமெந்து போன்ற பொருள்களை மொத்தமாக நெடுஞ்சாலை மற்றும் தொடருந்து மூலம் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவைக் குறைக்க முடியும்’’ என்றும் அவர் கூறியுள்ளார்.
2011இல், தூத்துக்குடி– கொழும்பு இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. எனி னும், வணிக ரீதியாக வெற்றியளிக்காததால், இந்தக் கப்பல் சேவையை நடத்திய தனியார் நிறு வனம், அதனை நிறுத்தியது.
தற்போது, அரசு காங்கேசன்துறை துறைமுகத்தை தரமுயர்த்தி வருகிறது. இதற்காக, இந்தியா வின் எக்சிம் வங்கியிடம் இருந்து 45.27 மில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளது.