இந்தியாவுக்கு சுற்றுலா போகிறீா்களா..? இந்த 20 இடங்களுக்கு செல்ல தவறாதீா்கள்..

ஆசிரியர் - Editor
இந்தியாவுக்கு சுற்றுலா போகிறீா்களா..? இந்த 20 இடங்களுக்கு செல்ல தவறாதீா்கள்..

அசாம் மாநிலத்தின் கலாச்சார தாயகமாக மஜூலி தீவு விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவை பார்க்க விரும்புபவர்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும். இது பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள ஜோர்கட் நகரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

பயணங்கள் மிகப்பெரிய மனிதர்களை உருவாக்கியுள்ளது. மிகப்பரிய எழுத்தாளர்கள், போராளிகள், கலைஞர்கள் ஆகியோர் பயணங்களை அதிகம் விரும்புபவர்களாக இருந்துள்ளனர். பயணங்கள் பல்வேறு அனுபவங்களை அள்ளித் தருகின்ற தாய்மடியாக, ஆசானாக விளங்குகிறது. அந்த வகையில் இந்தியாவில் பார்க்க வேண்டிய 20 இடங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தவிர்க்கவே கூடாத 20 இடங்கள் இவை.

1.மன்னார் வளைகுடா:

மன்னார் வளைகுடாவானது இந்தியப் பெருங்கடலுக்கு உட்பட்ட லட்சத்தீவுகள் பகுதியில் அமைந்துள்ளது. வெள்ளை வானம், நீல நிற கண்ணாடி போன்ற நீர்வளம், பசுமை போர்த்தப்பட்ட நிலப்பகுதி ஆகியவற்றை தன்னகத்தே கொண்டது மன்னார் வளைகுடா. அங்கு சென்றால் டால்பின்கள், கடல் ஆமைகள், திமிங்கலங்கள் உள்ளிட்டவற்றை நிச்சயம் பார்க்கலாம்.

2. மெக்லியோட்கன்ஜ்: 

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவுலாத்தர் மலைத்தொடரில் மெக்லியோட்கன்ஜ் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் முழுவதும் நுட்பமான பள்ளத்தாக்குகள் நிறைந்துள்ளது. இங்கு செல்வது மிகவும் சவாலாக இருக்கும்.  இந்த பயணத்தின்போது இரவு நேரத்தில் லட்சக்கணக்கான விண்மீன் கூட்டத்தை மிக அருகே பார்த்து ரசிக்கலாம்.

3. தவாங்:

மிக நெருக்கமான மடாலயங்கள் நிறைந்த பகுதியான தவாங் அருணாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ளது. புத்தமத துறவி தலாய்லாமா பிறந்த ஊர் தவாங். மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை இங்கு கடுமையாக குளிரடிக்கும். ஆனால், மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தும்.

4.  ஷெட்டிஹலி: 

கர்நாடகாவின் தென்பகுதியில் பாய்ந்தோடும் ஹேமாவதி ஆற்றுக்கு அருகே ஷெட்டிஹலி அமைந்துள்ளது. இங்குள்ள கோதித் தேவாலய கட்டட அமைப்பு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய முக்கிய இடம் ஷெட்டிஹலி.

5. மஜூலி:

அசாம் மாநிலத்தின் கலாச்சார தாயகமாக மஜூலி தீவு விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவை பார்க்க விரும்புபவர்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும். இது பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள ஜோர்கட் நகரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

6. பனாரஸ்:

உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரம் பனாரஸ் என்று அழைக்கப்படுகிறது. கங்கைக் நதிக்கரையில் அமைந்துள்ள இப்பகுதியை இந்துக்களின் புனித நகரம் என்று கூறுகின்றனர். தீபாராதணைகள், வழிபாடுகள், சாதுக்கள் நிறைந்த பகுதியாக இந்நகரம் காட்சி அளிக்கிறது. கங்கை நதியில் படகு சவாரி செய்வது சுற்றுலா விரும்பிகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

7. சேம்பேனர்:

குஜராத்தின் வரலாற்று நகரம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில், கோட்டைகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட வரலாற்று ஆதாரங்கள் நிறைந்துள்ளது. இங்குள்ள பகத் மலைப்பகுதி மிகவும் புகழ்பெற்றது. காரணம், ராமாயண புராணத்தில் அனுமன் மலையை தூக்கி வரும்போது உடைந்து விழுந்த ஒரு பாகம்தான் இந்த மலை என்று கூறப்படுகிறது. இந்த மல்லையின்மேல் கோயில் உள்ளது.

8. பிஷ்னுபூர்:

 

பழங்கால கட்டட கலைகளின் தாயகமாக விளங்கும் பிஷ்னுபூர், மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. வானுயர்ந்த கோட்டைகளும், பழைய கட்டடங்களும், கோயில்களும் இந்நகரத்தின் சிறப்புகளாகும். சுடுமண்ணால் கட்டப்படும் டெரக்கோட்டா கட்டடங்கள் இப்பகுதியின் தனிச்சிறப்பாகும்.

9. பின்சார் மற்றும் அல்மோரா:

பின்சார், அல்மோரா மலைப்பகுதிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. வன உயிரினங்களின் சங்கமாக இந்த மலைப் பகுதிகள் உள்ளன. மலையேற்றம் செல்ல விரும்புபவர்களுக்கு இது உகந்த இடம். அதேபோல், வன விலங்கு ஆர்வர்களுக்கும் இந்த பகுதி, சிறந்த இடம். 

10.  படான்:

குஜராத் சரஸ்வதி நதிக்கரையில் இந்த கோட்டை அமைந்துள்ளது. கி.பி 745ம் ஆண்டு வன்ராஜ் சவுதா என்கிற சவுதா வம்சத்து மன்னரால் இந்தக் கோட்டை கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோட்டையின் கட்டகலை அமைப்பு பலரையும் ஈர்க்கும் விதமாக உள்ளது. இது பலரும் அறிந்திராத இடமாக உள்ளது.

11. சிஜூ குகை:

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் சிஜூ குகை அமைந்துள்ளது. 1927ம் ஆண்டு இந்த குகை கண்டறியப்பட்டது. பகலிலும் கும்மிருட்டாக உள்ள இந்த குகையின் வெப்பநிலை எப்போதுமே, 21 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை சீராக இருக்கும். நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் இது.

12. சுரு:

சுரு நகரம், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. சுரு நகரம் முழுவதும், கோட்டைகளுகம், பழங்கால கட்டடங்களும் நிறைந்த பகுதியாக உள்ளது. குறிப்பாக இங்குள்ள ஹவா மஹாலானது, மிகவும் புகழ்பெற்றது. இந்த மாஹாலின் தனிச்சிறப்பே இதில் உள்ள ஆயிரத்து 111 கதவு மற்றும் ஜன்னல்கள்தான். 

13. தீர்த்தன் பள்ளத்தாக்கு:

 

சாகச பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தீர்த்தன் பள்ளத்தாக்குக்கு செல்லலாம். மலையேற்றம், மீன் பிடித்தல், விளையாட்டு என அனைத்து அம்சங்களும் நிறைந்ததாக அப்பகுதி இருக்கும். 

14. நராரா தேசிய கடல் பூங்கா:

நராரா தேசிய கடல் பூங்கா குஜராத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. கடல்வாழ் உயிரினங்களை பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த இடம் மிகவும் ஏற்றதாக இருக்கும். எல்லா வகையான கடல்வாழ் உயிரினங்களும் இந்த பூங்காவில் காணப்படுகிறது. இந்த பூங்கா பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது.

15. நுப்ரா பள்ளத்தாக்கு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் நுப்ரா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. கண்கள் கொள்ளையடிக்கும் காட்சிகளும், இயற்கை எழில் நிறைந்த காட்சிகளும் இங்கு அதிகம். நுப்ரா பள்ளத்தாக்கு மிகுந்து புத்துணர்ச்சியை அளிக்க கூடிய குளிர் பிரதேசம். மனதை மயக்கும் இயற்கையின் பேரழகில் நேரம் கடப்பது தெரியாமல் மகிழ்ந்திருக்கலாம்.

16. கசோல்:

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் கசோல் அமைந்துள்ளது. மலைப்பகுதியான கசோல், சிற்றோடைகள், ஆறுகள், சிறிய பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதியாக உள்ளது. பசுமை போர்த்தப்பட்ட இந்த மலைப் பகுதி பயணம் தீராத அனுபவத்தை தரக்கூடியது.

17. ஹலேபிட்:

கர்நாடகா ஹாஸ்ஸன் மாவட்டத்தில் ஹலேபிட் நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தின் முக்கிய அடையாளமாக ஜைன மத்தத்தவர்களின் கோயில்கள் அமைந்துள்ளது. ஜைன மதத்தவரின் கட்டடக்கலை பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஜைன மதத்தினர் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் வந்து செல்லும் பகுதியாக இந்நகரம் உள்ளது.

18.  பேஹேடாகாட்:

மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் பேஹேடாகாட் பகுதி அமைந்துள்ளது. கோட்டைகள், நதிகள், வரலாற்றின் நினைவுச் சின்னங்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது பேஹேடாகாட். இங்கு ஓடும் நர்மதா நதியில் படகு சவாரி செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

19. கம்ஷேத்:

மகாராஷ்ட்ரா மாவல் மாவட்டத்தில் கம்ஷேத் பகுதி அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற பாவனா ஏரி, ஷிண்டேவாடி மலைப்பகுதி, பேட்ஸ்டா குகைப்பகுதி ஆங்கியவை இங்கு நிறைந்துள்ளது. ஷிண்டேவாடி மலைப்பகுதியில், பாராசூட் பயணத்திற்கு அனுமதி உண்டு. பாராசூட்டில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த இடம் மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கும்.

20. உனகோட்டி: 

திரிபுராவில் அமைந்துள்ளது உனகோட்டி மலைப்பகுதி. சிவன் கோயில்களும் சைவமுறை வழிபாடுகளும் நிறைந்த பகுதியாக  உள்ளது. கற்பாறைகளில் சிவனின் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளது இந்த மலையின் தனிச்சிறப்பு. இங்குள்ள ஏராளமான பாறைகளில் சிவன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த மலையில் சிறிய அளவிலான அருவிகளும் உள்ளது. 

Radio
×